புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

13 நவ., 2015

புயல் சீற்றத்தில் தடைகளை தாண்டி கர்ப்பிணியை காப்பாற்றிய ரவீந்திரன்! (நெகிழ வைக்கும் படங்கள்)

கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே புயல், வெள்ளத்தில் கர்ப்பிணி பெண்ணுடன் சிக்கிக் கொண்ட 108 ஆம்புலன்சுக்கு ஏற்பட்ட தடைகளை
விலக்கி சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உதவி செய்துள்ளார் கிள்ளை முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரன்.

 
சிதம்பரம் அருகே கிள்ளை தைக்கால் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செல்வக்குமாரி (25). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு தீபாவளி பண்டிகையான செவ்வாய்க்கிழமை காலை பிரசவவலி எடுத்தது. 

இதனையடுத்து. 108 ஆம்புலன்ஸில் கர்ப்பிணி பெண் செல்வக்குமாரியுடன் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனைக்கு புறப்பட்டனர். அப்போது சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், சாலை முழுவதும் தெரியவில்லை. மேலும் மின்கம்பங்கள், மரங்கள் சாலையில் விழுந்து கிடந்தன.
 
இதுகுறித்து ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வெங்கடேசன், கிள்ளை முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ரவீந்திரனுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். உடனடியாக ரவீந்திரன் தனது ஜீப்பில் ஆட்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரங்கள் மற்றும் மின் கம்பங்களை அப்புறப்படுத்தி ஆம்புலன்ஸ் செல்ல வழி ஏற்படுத்தினார். அப்போது, ஏற்பட்ட பலத்த காற்றில் கிள்ளை ரயில்வே கேட் மூடிக்கொண்டதோடு, ஆம்புலன்ஸூம் பழுதாகி நின்று விட்டது. பின்னர் தனது ஆட்களை கொண்டு கேட்டை தூக்கி ஜீப்பில் கயிற்றை கட்டி ஆம்புலன்ஸை இழுத்து வந்து சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையில் சேர்த்தார்.

மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கர்ப்பிணி பெண் செல்வக்குமாரிக்கு மதியம் 3.30 மணிக்கு பெண் குழந்தை பிறந்தது. தற்போது, தாயும் சேயும் நலமாக இருக்கிறார்கள்.

ad

ad