புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016



மிழகத் தேர்தல் களம் சூடேறிவிட்டது. தி.மு.க., தே.மு.தி.க. + மக்கள் நலக் கூட்டணி + த.மா.கா. அணி, பா.ம.க. இவற்றை மிஞ்சும்
வகையில் இவற் றோடு ஜெ. மேற்கொள்ளும் தேர்தல் பிரச்சாரம் எடு படுகிறதா என உளவுத் துறையை விட்டு ஆராய சொன்னார் ஜெ. உளவுத் துறை கொடுத்த ரிப்போர்ட் ஜெ.வுக்கு நெகட்டிவ் ஆக வந்திருக்கிறது. அதனால் அ.தி.மு.க. தேர்தல் வியூ கங்களை மாற்றிவிட்டது என்கிறார்கள் அ.தி.மு.க. வின் உயர்மட்ட தலைவர்கள்.

அ.தி.மு.க. தனது பலம் என நம்பியிருப்பது பண விநியோகத்தைதான். பண விநியோகத்திற்கு அ.தி.மு.க. எப்படிப்பட்ட ஏற்பாடுகளை செய் திருக்கிறது என கடந்த நக்கீரன் இதழில் கவர் ஸ்டோரி வெளியானதால் அதிர்ந்து போனது போயஸ் தோட்டம். ""16-ம் தேதி இரவு பண விநியோகம் குறித்து ஒரு உத்தரவு மாவட்டங் களுக்கு பறந்தது. "ஒவ்வொரு மாவட்டமும் உட னடியாக ஒரு குறிப்பிட்ட தேதியில் வாக்காளர் களிடம் பணத்தை கொண்டு சேருங்கள். ஒரு ஓட்டுக்கு 500 என ஒவ்வொரு குடும்பத்தில் உள்ள -வாக்கு எண்ணிக்கைக்கு ஏற்றவாறு பணத்தைக் கொடுங்கள்' என்பதுதான் அந்த உத்தரவு'' என்கிறார்கள் ஃபீல்டில் உள்ளவர்கள்.
17-ம் தேதி இந்தப் பண விநியோகத்தை மேற் கொண்டுள்ள அ.தி.மு.க.வின் டெல்டா மாவட்ட தலைவர் ஒருவரிடம் பேசும் வாய்ப்பு அமைந்தது.


""அ.தி.மு.க.வுக்கு துளியும் தொடர்பு இல்லாத நிர்வாகிகள் மூலம்தான் பணம் விநியோகிக்கப்படு கிறது. கிராம நிர்வாக அதிகாரி போன்றவர்களுக்கு நெருக்கமான- நம்பிக்கையான ஆளாக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவரிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப் படுகிறது. இது முதல் கட்ட விநி யோகம்தான். இந்தப் பண விநி யோகம் முடிந்ததும் உளவுத்துறை மற்றும் தனியார் ஏஜென்சிகள் அ.தி.மு.க.வின் பலம் கூடியுள்ள தா? என ரகசிய சர்வே எடுக்கும். அதன் முடிவுப்படி வீக் தொகுதி களுக்கு மேலும் பணம் அனுப் பப்படும்'' என்கிறார்கள் அ.தி. மு.க. உயர்மட்ட தலைவர்கள்.
ஜெ. போட்டியிடும் ஆர்.கே. நகரில் சிறுவர்களை வீடு வீடாக அனுப்பி பேங்க் அக்கவுண்ட் + செல் நம்பர்கள் கேட்டிருக்கிறது அ.தி.மு.க.
தற்போதைய கள நிலவரம் அ.தி.மு.க.விற்கும், தி.மு.க.விற்கும் பல இடங்களில் கடும் போட்டி என வருவதால் இறுதிக்கட்டமாக 50 வேட்பாளர்களை மாற்ற அ.தி.மு.க. முடிவு எடுத்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணா மலை, ஈரோடு, கோவை, கரூர், குமரி ஆகிய மாவட்டங்களில் வேட்பாளர்களை மாற்ற அ.தி.மு.க. பரிசீலித்து வருகிறது.

ad

ad