புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஏப்., 2016

தாய்மைக்கே அவமானம்: கேரளாவில் ’காமத்திற்காக’ நடந்த கொடூரக் கொலை

கேரளாவில் ஐ.டி ஊழியர் ஒருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சக பெண் ஊழியருக்கு வாழ் நாள் சிறை தண்டனை
விதிக்கப்பட்டுள்ளது.
நினோ மேத்யூ என்ற நபரும் அனுசாந்தி என்ற பெண்ணும் கேரளாவில் உள்ள ஐ.டி பார்க்கில் பணிபுரிந்து வந்துள்ளனர். அனுசாந்திக்கு லிஜேஷ் என்ற கணவரும் 3 வயதில் ஒரு குழந்தையும் இருந்துள்ளார்.
இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. தங்களின் காதலுக்கு தன் கணவரும், குழந்தையும் இடையூறாக இருப்பதாக கருதிய அனுசாந்தி, நினோ மேத்யூ-உடன் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
இந்த சம்பவம் கடந்த 2014ம் ஆண்டு நடந்துள்ளது. நினோ மேத்யூஸ் அனுசாந்தியின் 3 வயது மகளான ஸ்வஸ்திகாவை கொலை செய்ததோடு, அனுசாந்தியின் மாமியாரான ஓமனாவையும் கொலை செய்துள்ளார்.
இந்த கொலைகளை செய்த போது வீட்டில், லிஜேஷ் இல்லாததால், லிஜேஷ் வருவதற்காக அரை மணி நேரம் நினோ மேத்யூஸ் அங்கே காத்திருந்துள்ளார்.
இதையடுத்து லிஜேஷையும் கொலை செய்ய முயன்ற போது அவர் அதிஷ்டவசமாக காயங்களுடன் தப்பியோடியுள்ளார்.
அவர் அக்கம் பக்கத்தினரிடம் நடந்தவற்றை கூறிய பின்னர் தான் இந்த கொலை சம்பவம் பொலிசாருக்கு தெரியவந்துள்ளது.
இது தொடர்பான வழக்கு நடந்த வந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 49 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர்.
85 ஆவணங்கள் ஆதாரமாக காட்டப்பட்டுள்ளன.மேலும் குற்றம்சாட்டபட்டவர்களின் லேப்டாப்பில் இருந்த வீடியோ ஆதாரங்களும் தடயங்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதில் முக்கிய சாட்சியாக அனுசாந்தியின் கணவர் லிஜேஷ் அளித்த வாக்குமூலம் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு வழங்கியுள்ள திருவனந்தபுரம் நீதிமன்றம், இந்த வழக்கினை அரிதினும் அரிதான வழக்கு என குறிப்பிட்டுள்ளது.
மிகவும் கொடூரமான மற்றும் இழிந்த குற்றம் என இதனை குறிப்பிட்ட நீதிபதி, அனுசாந்தி இந்த கொலை குற்றத்தில் தீவிரமாக ஈடுபட்டிருந்தாலும், அவர் பெண் என்பதால் இந்த வழக்கின் தீவிர தண்டனையில் இருந்து அவர் விலக்கப்படுகிறார்.
அனுசாந்தியின் இந்த செயல் “தாய்மைக்கு அவமானம்” என குறிப்பிட்ட நீதிபதி, காமத்திற்காக பெற்ற மகளையும், மாமியாரையும் இரக்கமற்ற முறையில் கொலை செய்ய உதவியதாக அனுசாந்தி உதவியதை குறிப்பிட்டுள்ளனர்.
நினோ மேத்யூவிற்கு மரண தண்டனையும், அனுசாந்திக்கு வாழ் நாள் சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளித்துள்ளனர்.
மேலும், இருவரும் தலா 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.அவற்றில் 50 லட்சம் ரூபாயை அனுசாந்தி கணவர் லிஜேஷுக்கு வழங்குமாறு குறிப்பிட்டுள்ளனர்.

ad

ad