புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2016

காங்., மூத்த தலைவர் கமல்நாத் திடீர் ராஜினாமா

மூன்று நாட்களுக்கு முன்பாக பஞ்சாப் மாநில காங்கிரசின் பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்ட மூத்த காங்கிரஸ் தலைவர் கமல் நாத், திடீரென தனது பதவியை நேற்று ராஜினாமா செய்துள்ளார். 

பஞ்சாப் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் நெருங்கி வருவதையொட்டி, கடந்த 3 தினங்களுக்கு முன்பாக அம்மாநில காங்கிரசின் பொதுச்செயலாளராக கமல்நாத்தை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்தது. இந்த நிலையில் கடந்த 1984ம் ஆண்டு நடைபெற்ற சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் கமல்நாத்திற்கும் தொடர்புள்ளதாக பாஜக, ஆம் ஆத்மி குற்றம்சாட்டின. இதையடுத்து கமல்நாத் நேற்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். 

இதுகுறித்து சோனியாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், “பேரவை தேர்தலை மனதில் கொண்டு என்னைப்பற்றி பரப்பப்படும் குற்றச்சாட்டுகளின் மூலம் அரசியல் ஆதாயம் தேட சில கட்சிகள் முயற்சிக்கின்றனர். இதன்மூலம், பஞ்சாப் மாநிலத்தின் உண்மையான பிரச்னைகள் பின்னுக்கு தள்ளப்படுவதை நான் விரும்பவில்லை. எனவே, பஞ்சாப் மாநில பொறுப்பிலிருந்து நான் விலக விரும்புகிறேன்” என தெரிவித்து இருந்தார். இதையடுத்து அவரது ராஜினாமாவை கட்சித்தலைவர் சோனியா காந்தி ஏற்றுக்கொண்டார். 

ad

ad