புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஜூன், 2016

சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி இந்தியா–ஆஸ்திரேலியா இன்று மோதல்

6 அணிகள் மோதும் சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி லண்டனில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெறும் கடைசி லீக்
ஆட்டத்தில் இந்திய அணி, உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. ஆஸ்திரேலிய அணி 3 வெற்றி, ஒரு டிராவுடன் 10 புள்ளிகள் பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று விட்டது. இந்திய அணி 2 வெற்றி, ஒரு டிரா, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகள் பெற்று 2–வது இடத்தில் உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றால் சிக்கலின்றி இறுதிப்போட்டிக்குள் நுழைந்து விடலாம். மாறாக இந்திய அணி தோல்வி கண்டால், இங்கிலாந்து–பெல்ஜியம் அணிகள் இடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தால் தான் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேற முடியும். இங்கிலாந்து அணி 5 புள்ளியும், பெல்ஜியம் அணி 4 புள்ளியும் பெற்று 3–வது மற்றும் 4–வது இடத்தில் இருக்கின்றன. ஒலிம்பிக் சாம்பியன் ஜெர்மனி, தென் கொரியா அணிகள் இறுதி வாய்ப்பை இழந்து விட்டன.
2 மாதங்களுக்கு முன்பு நடந்த அஸ்லான் ஷா கோப்பை போட்டியில் இந்திய அணி 2 முறை ஆஸ்திரேலியாவிடம் தோல்வி கண்டது. எனவே இந்த ஆட்டம் இந்திய அணிக்கு கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷன் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

ad

ad