புதன், ஜூலை 20, 2016

பாசனத்துக்காக அமராவதி அணை நாளை திறப்பு: ஜெயலலிதா உத்தரவு

பாசனத்துக்காக அமராவதி அணையில் இருந்து நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுவதாக முதலமைச்சர் ஜெயலலிதா
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.முதல்-அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி அமராவதி பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர் உள்ளிட்ட திருப்பூர் மாவட்ட வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
இந்த வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு 21.7.2016 முதல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.
இதனால், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 32,770 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.