புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜூலை, 2016

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவருக்குப் பிணை

யாழ்.பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இன்று நீதிமன்றில் ஆஜரான, பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய தலைவர்
திசிதரன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இன்று காலை திசிதரன் நீதிமன்றில் ஆஜராகிய நிலையில், தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் நீதவான் சதீஸ்கரன் அவரை விடுவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 25ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு, கோப்பாய் பொலிஸில் வாக்குமூலம் வழங்குமாறு நீதிவான் பணித்தார்.அத்தோடு, தாமும் சம்பவம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்ய வேண்டுமென மாணவர் ஒன்றியத் தலைவர் கேட்டுக்கொண்டமைக்கமைய, அதற்கான அனுமதியையும் நீதவான் வழங்கினார். மாணவர் ஒன்றியத் தலைவர் தரப்பு சட்டத்தரணியாக, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நீதிமன்றில் ஆஜராகியிருந்ததார்.
அதேவேளை, யாழ்.பல்கலையில் இடம்பெற்ற மோதலையடுத்து தற்போது சுமூகமான நிலை ஏற்பட்டு வரும் நிலையில், மாணவர் ஒன்றிய தலைவரை கைதுசெய்து விளக்கமறியலில் வைப்பதானது சுமூக நிலையை பாதிக்கும் என்ற சமர்ப்பணத்தை நீதிமன்றில் முன்வைத்ததாக, நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
காயமடைந்த மாணவன் வழங்கிய வாக்குமூலம் தாமதமாக வழங்கப்பட்ட வாக்குமூலம் என்பதை தாம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும், மோதல் குறித்து வெளியான காணொளியில் திசிதரன் அவ்வாறு யாரையும் தாக்கவில்லையென்றும், அவர் தாக்கப்பட்டமையே அதிகம் என்பதையும் தாம் நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்ததாக சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.

ad

ad