புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்

21 ஜூலை, 2016

புலம்பெயர் தமிழர்களுக்கான விழா அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பு

புலம்பெயர் தமிழர்களுக்கான விழா மீளவும் ஒத்திவைக்கப்பட உள்ளது. இந்த ஆண்டின் இறுதியில் தமிழ் புலம்பெயர் மக்களுக்கான விசேட
விழா ஒன்றை நடத்த அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும் பின்னர் இந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இறுதியிலும் விழா நடத்துவதாக அறிவிக்கப்பட்ட போதிலும் பின்னர் அந்த திட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. எதிர்வரும் 2018ஆம் ஆண்டில் புலம்பெயர் தமிழர் விழாவை நடத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதுஎதிர்வரும் 2018ஆம் ஆண்டு இலங்கையின் 70ஆம் சுதந்திர தின நிகழ்வுகளுக்கு சமாந்திரமாக தமிழ் புலம்பெயர் விழாவினை வெளிவிவகார அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.இந்த நிகழ்வு பிரமாண்டமான முறையில் நடத்தப்பட உள்ளது. இதற்காக உலகின் பல பாகங்களிலும் வாழும் புலம்பெயர் தமிழர்களுக்கு அழைப்ப விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையில் முதல் தடவையாக தமிழ் புலம்பெயர் விழா ஒன்று நடத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது