புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2016


"எங்கள் வாழ்வாதாரத்தை அழிப்பதுதான் ஜெ.வின் ட்ரீட்மெண்ட்டுக்கான அப்பல்லோவின் ஃபீஸா?' என அலறுகிறார்கள் கிரீம்ஸ் சாலை பகுதி பொது மக்கள்.
அப்பல்லோவுக்குப் அம்பேத்கர் நகர் என்கிற குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதி உள்ளது. அதில் குடியிருக்கும் 52 வயதான பரிமளா,. ""நான் பிறந்து வளர்ந்த பகுதிதான் இன்று அப்பல்லோ மருத்துவமனை அமைந்துள்ள பகுதி. இந்தப் பகுதியின் அடையாளமே நுங்கம்பாக்கம் கால்வாய்தான். அந்த கால்வாயின் கரையில் பெரிய பெரிய மரங்களோடு கரிமேடுங்கிற காடு இருந்தது. அதில் ஒரு பகுதியில்தான் எங்க குடிசை. பக்கத்தில் இருந்த பங்களாவுக்குப் பேரு நாமக்காரன் பங்களா.. அதை 1980 வாக்கிலேயே ஆஸ்பத்திரி கட்டுறதுக்காக ஒருத்தர் வாங்கி யிருக்கார். அவர்கிட்டேயிருந்து அப்பல்லோவின் இன்றைய உரிமையாளர் பிரதாப் சி.ரெட்டி வாங்கினார். எம்.ஜி.ஆர். அட்மிட்டான பிறகு அப்பல்லோ ஃபேமஸாயிடிச்சி.


அதற்கப்புறம்தான் நாமக்காரன் பங்களா எதிரில் இருந்த வீடுகளை அப்பல்லோ விலைக்கு கேட்டது. அப்பல்லோ எதிரில் உள்ள (SWISS HITTS) ஸ்விஸ் உள்ளிட்ட ஓட்டலை விலைக்கு கேட்டபோது நான் வேணும்னா அப்பல்லோ மருத்துவமனை நிலத்தையே வாங்குவேன். என்னோட நிலத்தை விற்க மாட்டேன்னு அவர் மறுத்துட்டாரு. அந்த ஓட்டலுக்கு பக்கத்தில் உள்ள நிலத்தின் உரிமையாளரான லோகு என்பவரும் தன்னோட நிலத்தை விற்க மறுத்துட்டாரு.. அத னால் அப்பல்லோ மருத்துவமனைக்கு பக்கத்தில் கட்டப்பட்ட சிந்தூரி ஓட்டலை அப்பல்லோ வாங்கி தன்னுடன் இணைத்து விடுகிறது. அப்பல்லோ விற்கும் சிந்தூரி ஓட்டலுக்கும் இடையே தமிழ்நாடு போலீஸ் குவார்ட்டர்சுக்குப் போவதற்கான பாதை இருந்தது, அதையும் வாங்கிட்டாங்க.
அப்பல்லோ வளர ஆரம்பித்து, இடப்பற்றாக்குறை அதிகமானதும் நாங்கள் தங்கியிருந்த கரிமேட்டு பகுதியிலிருந்த குடிசைகள் மேல் கண் வச்சிட்டாங்க. அரசாங்கம், கார்ப்பரேஷன் எல்லாம் அவங்களுக்கு சப்போர்ட்டு. 1986ம் வருடம் எங்களை அங்கேயிருந்து அகற்றிட்டாங்க.  அதற்கு மாற்றாக காஞ்சிபுரம் மாவட்டம் கொடியூரில் நிலம் மட்டும் அரசு கொடுத்தது. நாங்க குடியிருந்த பகுதியையே அப்பல்லோ நிர்வாகத்திற்கான இரு சக்கர வாகன நிறுத்தும் பகுதியாக மாற்றிக் கொண்டார்கள். அத்துடன் இந்தப் பகுதியின் அடையாளமாக இருந்த நுங்கம்பாக்கம் கால்வாயையும் அப்பல்லோகாரங்க ஆக்கிரமிச்சிட்டாங்க. அந்த கால்வாயின் மேல் கட்டியிருக்கிற கட்டிடத்தில்தான் இன்று அப்பல்லோ மருத்துவமனையின் பல பகுதிகள் இயங்குகிறது'' என்றார் விரிவாக..
கிரீம்ஸ் ரோடு ஏரியாவில் அப்பல்லோ பத்து மருத்துவமனை பிரிவுகளை நடத்தி வருகிறது.. ஒரு கிரவுண்டின் சந்தை விலையே பதினைந்து கோடி போகும் கிரீம்ஸ் ரோடு பகுதியில் அப்பல்லோ ஆக்கிரமித்த நிலத்தின் மதிப்பு எவ்வளவு என பல கேள்விகளோடு ஆக்கிரமிக்கப் பட்ட கால்வாயைத் தேடினோம்.



நுங்கம்பாக்கத்தில் மத்திய அரசு நிறுவனமான சாஸ்திரி பவன் அமைந்துள்ள ஹாடோஸ் சாலை வரை தேடிச் சென்றோம். ஹாடோஸ் சாலை பூங்கா தொடங்கி அப்பல்லோ மருத்துவமனைக்கு அருகிலுள்ள கால்வாய் பூங்கா வரை பயணித்தோம். பூங்காவுக்குள்....

ad

ad