புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2016

ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசாரத்துக்காக ஒரு கோடி டாலர் நிதி திரட்டிய இந்தியர்கள்

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இதனையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க
வரும் நவம்பர் மாதம் 8-ம் தேதி தேர்தல் நடக்கிறது.
இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளராக, முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவியும், முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சருமான ஹிலாரி கிளிண்டன் போட்டியிடுகிறார். குடியரசு கட்சியின் சார்பில் பிரபல ரியல் எஸ்டேட் அதிபரான டொனால்ட் டிரம்ப் அவரை எதிர்த்து களம் காண்கிறார்.
இந்நிலையில், ஹிலாரி கிளிண்டன் கடந்த 12-4-2015 முதல் தனது தேர்தல் செலவுக்காக நிதி திரட்டும் பிரசார பயணத்தை தொடங்கினார். ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசார செலவுக்காக ஒரு கோடி டாலர்களுக்கும் அதிகமான தொகையை அமெரிக்காவாழ் இந்தியர்கள் நிதியாக திரட்டி தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஹிலாரியின் தேர்தல் நிதிக்காக அதிகமான தொகையை வசூலித்துதந்த அமெரிக்காவாழ் இந்தியர்களின் பட்டியலை அவரது பிரசார அலுவலகம் வெளியிட்டுள்ளது.
இந்த பட்டியலின்படி, சான் பிரான்சிஸ்கோ நகரை சேர்ந்த அஜய் புட்டோரியா மற்றும் வினிதா புட்டோரியா ஆகியோர் மட்டும் தேர்தல் நிதியாக 5 லட்சம் டாலர்களை வழங்கியுள்ளனர்.
கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த ஷெபாலி ரஸ்டான் டுக்கல், மேரிலான்ட் பகுதியை சேர்ந்த பிராங்க் இஸ்லாம் ஆகியோர் தலா ஒரு லட்சம் டாலர்களை தேர்தல் நிதியாக அளித்துள்ளனர். இதேபோல் சுமார் 30 பேர் தலா ஒரு லட்சம் டாலர்கள்வரை நிதி திரட்டி தந்துள்ளனர்.
இதுபோல் மேலும் பலர் நிதியளித்துள்ள நிலையில் ஹிலாரி கிளிண்டனின் தேர்தல் பிரசார செலவுக்காக ஒரு கோடி டாலர்களுக்கும் அதிகமான தொகையை அமெரிக்காவாழ் இந்தியர்கள் நிதியாக திரட்டி தந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

ad

ad