புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 அக்., 2016

ஆசிய கோப்பை ஆக்கி: இறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்


4–வது ஆசிய கோப்பை ஆண்கள் ஆக்கி போட்டி மலேசியாவில் உள்ள குயான்டனில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற முதல் அரை இறுதி போட்டியில் இந்திய அணி தென்கொரிய அணியிடம் மோதியது. இப்போட்டியில் இந்திய அணி 15-வது நிமிடத்தில் தல்விந்தர் சிங் ஒரு கோலை பதித்தார். இதையடுத்து ராமன்தீப் சிங் 55-வது நிமிடத்தில் அணியின் இரண்டாவது கோல் அடித்தார். இதேபோல் தென் கொரிய அணிக்கு இன்வோ சியோ (21வது நிமிடம்), ஜிஹுன் யாங் (53வது) தலா ஒரு கோல் அடித்ததால் இரு அணிகளும் 2 - 2 என்ற கோல் கணக்கில் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட் முறை பின்பற்றப்பட்டது. இதில் 5 கோல் அடித்து அசத்திய இந்திய வீரர்கள் 5 - 4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது இதனால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இன்று நடக்க உள்ள இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பியன் பாகிஸ்தானுடன் - இந்திய அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. யா‌ர் சா‌ம்‌பிய‌ன் கோ‌ப்பை கை‌ப்ப‌ற்றுவா‌ர்க‌ள் எ‌‌ன்று மிகுந்த ஆர்வத்துடன் ர‌சிக‌ர்‌க‌ள்  எ‌தி‌ர்பா‌ர்‌த்து‌ கொ‌ண்டிரு‌க்‌கிற‌ா‌ர்க‌ள்.

ad

ad