புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2018

புலிகள் இருந்திருந்தால் அங்கஜன் யாழ்ப்பாணம் வந்திருக்க முடியுமா? - சிறிகாந்தா

விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக
எமது மண்­ணில் வந்­தி­ருக்க மாட்­டார் என்று ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா தெரி­வித்­தார். நிரந்­தர தீர்வு நோக்­கிய பய­ணத்­தில் உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளின் வகி­பா­கம் என்ற தொனிப்­பொ­ரு­ளில் நீரா­வி­யடி இலங்கை வேந்­தன் கலைக் கல்­லுரி மண்­ட­பத்­தில் நேற்று கருத்­தா­டல் நிகழ்வு நடை­பெற்­றது. அதில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.
விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஊடாக ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக எமது மண்­ணில் வந்­தி­ருக்க மாட்­டார் என்று ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா தெரி­வித்­தார். நிரந்­தர தீர்வு நோக்­கிய பய­ணத்­தில் உள்­ளு­ராட்சி மன்ற தேர்­தல்­க­ளின் வகி­பா­கம் என்ற தொனிப்­பொ­ரு­ளில் நீரா­வி­யடி இலங்கை வேந்­தன் கலைக் கல்­லுரி மண்­ட­பத்­தில் நேற்று கருத்­தா­டல் நிகழ்வு நடை­பெற்­றது. அதில் கலந்­து ­கொண்டு உரை­யாற்­றும்­போதே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார்.

“ சட்­டம் தெரி­யா­த­வர்­க­ளுக்கு சட்­டம் சம்­பந்­த­மாக தவ­றான விளக்­கங்­களை கொடுத்­தால் சட்­டத்­த­ர­ணி­கள் கண்­டு­பி­டித்து சரி­யான விளக்­கத்தை கொடுப்­பார்­கள். ஆனால் தமிழ் மக்­க­ளின் சாபக் கேடு, சட்­டம் தெரிந்த சிலரே தமது சுய­நல அர­சி­ய­லுக்­கா­கப் பொய்யை கூறி­வ­ரு­கின்­ற­னர். தற்­போது வெளி­வந்­துள்­ளது இடை­கால அறிக்கை மட்­டும்­தான் என்­பதை தெரிந்­தும் சிலர் வேண்­டு­மென்றே பொய்ப் பரப்­பு­ரை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

சம்­பந்­தன், சுமந்­தி­ர­னைக் குறி­வைத்து ஒரு சில நபர்­கள் தாக்­கு­கின்­ற­னர். அவர்­கள் மீள அடிக்க ஆரம்­பித்­தால் நீங்­கள் தாங்க மாட்­டீர்­கள். எம்­மில் சிலர் கெட்­டித்­த­ன­மா­கக் கூட பொய் சொல்­லத் தெரி­யா­த­வர்­க­ளாக இருக்­கின்­ற­னர். இத­னால் தான் இப்­போது லஞ்ச குற்­றச்­சாட்­டைச் சுமத்தி வரு­கின்­ற­னர். இது தொடர்­பாக ஏற்­க­னவே நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் விளக்­கம் அளித்­துள்­ள­னர்.

சைக்­கிள்­கார்­கள் தமது பக்­கம் கொஞ்ச இளை­யோரை வைத்­துக்­கொண்டு தங்­கள் பக்­கம் இளை­ஞர் படை இருக்­கின்­றது என்று கூறி­வ­ரு­கின்­ற­னர். கொஞ்ச இளை­யோரை ஏமாற்­றித் தங்­கள் பின்­னால் வைத்­துள்­ள­னர். ஆனால் உல­கம் தெரிந்த இளை­யோர், அனு­ப­வ­சா­லி­கள், முதி­ய­வர்­கள் என்று பெரும் கூட்­டமே எமது பக்­கம் உள்­ளது.

மல்­லா­கம் பகு­தி­யில் அர­சி­யல் தெரி­யாத பல அப்­பாவி சடத்­த­ர­ணி­கள் தேர்­த­லில் கள­மி­றக்­கப்­பட்­டுள்­ள­னர். அவர்­கள் அப்­பாவி வேட்­பா­ளர்­கள். மிக­வும் பாவ­மா­ன­வர்­கள். இப்­போது பல சின்ன சட்­டத்­த­ர­ணி­கள் ஏதோ எல்­லாம் கண்­ட­படி பேசு­கின்­ற­னர்.

ஒரு சின்ன சட்­டத்­த­ரணி வட­ம­ராட்­சி­யில் வைத்து சுமந்­தி­ரனை மக்­கள் தூக்கி எறிய வேண்­டும் என்று கூறி­யுள்­ளார். வட­ம­ராட்சி மக்­கள் தெரிவு செய்­து­தான் சுமந்­தி­ரனை நாடா­ளு­மன்­றுக்கு அனுப்பி வைத்­துள்­ள­னர் என்­பதை அவர் அறி­ய­வில்லை. கஜேந்­தி­ர­கு­மார் பொன்­னம்­ப­லம் கொஞ்­சம் கவ­ன­மாக இருக்க வேண்­டும்.

ஏனெ­னில் அவ­ரது காலை இழுத்து வீழ்த்தி விட்டு சின்­னச் சட்­டத்­த­ர­ணி­கள் அந்த இடத்­துக்கு வந்­து­வி­டு­வார்­கள்.

யாழ்ப்­பா­ணத்­தில் இத்­தனை கால­மாக நாம் தமி­ழர்­க­ளாக ஒற்­று­மை­யாக வாழ்ந்து வரும் நிலை­யில் எம்மை இந்­துக்­கள், கிறிஸ்­த­வர்­கள் என்று இரண்­டா­கப் பிரித்து எமது ஒற்­று­மையை உடைக்க சிலர் முயற்சி செய்து வரு­கின்­ற­னர்.

இவ்­வா­றான புத்தி உள்­ள­வர்­க­ளுக்கு தமிழ்த் தேசி­யம் பற்­றிக் கதைக்க என்ன தகுதி இருக்­கின்­றது. அவ்­வா­றா­ன­வர்­களை மக்­கள் அறிந்து வைத்­தி­ருக்க வேண்­டும்.இப்­போது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பை விமர்­சிக்­கும் கஜேந்­தி­ர­கு­மார் ஒரே சின்­னத்­தி­லேயே ஒற்­று­மை­யாக இருக்க முடி­யா­மல் சுரே­ஷூ­ட­னும், ஆனந்த சங்­க­ரி­யு­ட­னும் முட்டி மோதி பிரிந்து உள்­ளார். இவர்­கள்­தானா தமிழ் மக்­க­ளுக்கு தீர்வை வழங்­கப் போகின்­ற­னர்.

தேசி­யக் கட்­சி­யான சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சியை சேர்ந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் அங்­க­ஜன், விடு­த­லைப்­பு­லி­கள் இருந்­தி­ருந்­தால் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பில் இருப்­ப­வர்­களை விட்டு வைத்­தி­ருக்க மாட்­டார் என்று கூறி­ய­தாக அறிந்­தேன். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இப்­போது இருந்­தி­ருந்­தால் அங்­க­ஜன் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் உறுப்­பி­ன­ரா­க­வும், நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும் தேசி­யக் கட்சி ஊடாக யாழ்ப்­பாண மண்­ணில் வந்­தி­ருக்க மாட்­டார் – என்­றார்.

ad

ad