புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

2 பிப்., 2018

கத்தியின்றி ரத்தமின்றி ஆட்சியை மாற்றியது சம்பந்தனின் மதிநுட்பம்

2015இல் மகிந்தவின் அராஜக ஆட்சியை கத்தியின்றி ரத்தமின்றி முடிவுக்கு கொண்டுவந்தது எமது தலைவர் சம்பந்தன்
ஜயாவின் மதிநுட்பம்.
அதேபோல் 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புகளிலிருந்த ஒற்றையாட்சி என்ற பதத்தை தற்போதுள்ள இடைக்கால அரசியல் யாப்பில் ஒருமித்தநாடு (ஏக்கியராச்சிய) என்று மாற்றியதும் அவரது மதிநுட்பமே என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயலாளர் கி.துரைராஜசிங்கம் புகழாரம் சூட்டினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் காரைதீவில் நேற்று இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,
கறியின் ருசி அகப்பைக்குத் தெரியாது. அதேபோலத்தான் எம்மை விட்டு வெளியேறிவர்களும் நிலைமையும். தமிழ் மக்களின் உரிமைகளைப் பெறவும் இருக்கின்ற வளங்களை தக்கவைக்கவும் எமது கட்சி போராடிவருகிறது.
கிழக்கில் நாம் 11ஆசனங்களைப் பெற்றும் மு.காவிற்கு தாரை வார்த்துக் கொடுத்ததாக பலர் விமர்சனம் செய்கிறார்கள்.
நாம் யாருக்கும் முட்டுக்கொடுக்கவும் இல்லை விட்டுக் கொடுக்கவும் இல்லை. கிழக்கில் யாரும் தனித்து ஆட்சியமைக்க முடியாது என்ற ரகசியத்தை விளங்கிக் கொள்ளவேண்டும்.
கிழக்கு மாகாணசபை 37 உறுப்பினர்களைக் கொண்டது. மூவின மக்களும் உள்ள கிழக்கில் அறுதிப்பெரும்பான்மையை யாரும் பெற்றுவிடமுடியாது. இதனை மக்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
2018 வரவுசெலவுத்திட்டத்தில் வடக்கு கிழக்கு சார்பில் எத்தனையோ திட்டங்களை உள்ளடக்கியுள்ளோம். இது விமர்சிப்பவர்களுக்கு தெரியுமா?
காரைதீவில் எமது கட்சி மீது கொண்ட கசப்பணர்வு தப்பான அபிப்பிராயம் காரணமாக சில சகோதரர்கள் வேறு கட்சிகளில் கேட்கிறார்களாம்.
நீங்கள் அதையிட்டு பேசியிருக்கலாம். இன்னமும் காலம் போய் விடவில்லை. இப்பவும் பேசலாம். ஒரு சிறு கோபத்திற்காக நாம் தடம் மாறக்கூடாது. ஒற்றுமையாக பேசலாம் வாருங்கள் என்றார்.

ad

ad