2 பிப்., 2018

கூட்டணி வேட்பாளர் பிரபல கொள்ளையன் விஜயகாந்த்எ ன தீர்ப்பு

யாழ்ப்பாணம் மாநகரசபையின் முன்னாள் உறுப்பினரும் முற்போக்கு தமிழ் தேசியக் கட்சியின் செயலாளரும், உதயசூரியன் சின்னத்தில் பேட்டியிடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளருமான சுதர்சிங் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வருக்குமான தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 8ஆம் வழங்கப்படும் என யாழ்.நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்தரன் இன்று தெரிவித்தார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வங்கி உத்தியோகஸ்தர் ஒருவரின் வீடொன்றில் கடந்த 2013ஆம் ஆண்டு ஜூலை மாதம் கொள்ளை சம்பவம் ஒன்று இடம்பெற்றது. குறித்த கொள்ளைச்சம்பவம் தொடர்பில் விஜயகாந்த் உள்ளிட்ட நால்வரை கோப்பாய் பொலிஸார் கைது செய்தனர்.குறித்த வழக்கு யாழ்.நீதிவான் நீதிமன்றில் இடம்பெற்று வந்த நிலையில், குற்றவாளிகளாக காணப்பட்ட நால்வருக்கும் இன்று தீர்ப்பு வழங்கப்படும் என கடந்த ஜனவரி மாதம் 04 ஆம் திகதி நீதிவானால் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, தண்டனைத் தீர்ப்பு எதிர்வரும் மார்ச் 8ஆம் வழங்கப்படும் என யாழ்.நீதவான் அறிவித்தார்.