புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2018

வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்லக்கூடியவர்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு விளக்கம்

நாளை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் ஒரு கட்சி அல்லது சுயேட்சை குழு சார்பில் இருவர் தேர்தல்
முகவர்களாக செயற்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. 
வாக்கெடுப்பு காலை 7.00 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4.00 மணிவரை நடைபெறவுள்ள வாக்களிப்பின் போது கண்காணிப்பு குழு சார்பில் தேர்தல் ஆணைக்குழுவினால் அனுமதி வழங்கப்பட்ட கண்காணிப்பு அமைப்புக்கள் மாத்திரம் தமது பிரதிநிதிகளை கண்காணிப்பில் ஈடுபடுத்தமுடியும்.

அனுமதிக்கப்பட்ட அமைப்புக்களின் சார்பில் தலா ஒரு கண்காணிப்பாளருக்கு மட்டுமே இந்த அனுமதி உண்டு. இவர்கள் வாக்கெடுப்பு நிலைய பணிகளில் தலையிடுவதற்கோ வாக்காளர்களுடன் உரையாடவோ ,நடமாடவோ, சைகை காட்டவோ முடியாது. இதேபோன்று வாக்குநிலையத்திலிருந்து வெளியே செல்லமுடியாது.

இதேவேளை நடமாடும் பணியில் ஈடுபடும் கண்காணிப்பாளர்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.

இதற்கமைவாக எழுத்துமூலம் அனுமதிக்ககப்ட்டவர்கள் மாத்திரமே வாக்களிப்பு நிலையங்களுக்குள் செல்லமுடியும். இவர்கள் வாக்களிப்பு பணிகளில் இடையூறு ஏற்படாதவகையில் செயற்படவேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ad

ad