புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

9 பிப்., 2018

இராணுவத்தினர் பாடசாலைகளை ஒப்படைக்க வேண்டும்! - ஐ.நா குழு

இராணுவத்தினால் நடத்தப்படும் பாடசாலைகளை உடனடியாக கல்வி அமைச்சிடம் கையளிக்க வேண்டும் என்று ஐ.நா குழு வலியுறுத்தியுள்ளது. சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழு, இலங்கை தொடர்பான கண்டறிவுகள் குறித்து நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளது.

ஜெனிவாவில் ஜனவரி 15 தொடக்கம், பெப்ரவரி 02ஆம் திகதி வரை நடந்த சிறுவர் உரிமைகள் தொடர்பான ஐ.நா குழுவின் கூட்டம் இடம்பெற்றிருந்தது. இதில் இலங்கை , குவாட்டமாலா, பனாமா, சிஷெல்ஸ், ஸ்பெய்ன், சொலமன் தீவுகள், பாலோ மற்றும் மார்ஷல் தீவுகளில் சிறுவர்களின் நிலைமைகள் தொடர்பாக ஆராயப்பட்டது. இந்தக் கூட்டத்தின் முடிவில் இலங்கை தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ இராணுவத்தினர் நடத்தும் பாடசாலைகளை கல்வி அமைச்சிடம் கையளிக்கப்படுவதை உறுதிப்படுத்த வேண்டும். கடெற் படையணிக்கான பயிற்சியை இராணுவ செயற்பாடுகளுக்குள் உள்ளடக்கக் கூடாது. அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான, றோம் உடன்பாடு மற்றும் ஜெனிவா பிரகடனங்கள் தொடர்பான மேலதிக நெறிமுறைகளை ஏற்றுக் கொள்வது குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது

ad

ad