தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

இரு ஹெலிகொப்டர்கள் மோதிய விபத்தில் 18 பேர் பலி


ரஷியாவைச் சேர்ந்த இரு ஹெலிகொப்டர்கள் சைபீரியாவில் ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் ஒரு ஹெலிகொப்டர் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் பலியாகினர்.

ரஷிய தலைநகர் மாஸ்கோவில் இருந்து சுமார் 4 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கிரஸ்னோயார்ஸ்க் மாகாணத்தில் உள்ள துருகான்ஸ்க் மாவட்டத்தில் இருந்து இன்று இரு Mi-8 ரக ஹெலிகொப்டர்கள் புறப்பட்டன. ஒரு ஹெலிகொப்டரில் பெட்ரோல் கிணற்றில் பயன்படுத்தும் உபகரணங்கள் ஏற்றப்பட்டிருந்தன.

மற்றொரு ஹெலிகொப்டரில் அந்த எண்ணெய் கிணற்றில் வேலை செய்யும் 15 பணியாளர்கள் உள்ளிட்ட 18 பேர் சென்றனர் . அந்த ஹெலிகொப்டர் மேலே ஏற முயன்றபோது முன்னால் சென்ற ஹெலிகொப்டரில் ஏற்றப்பட்டு வெளியே நீட்டிகொண்டிருந்த இயந்திரத்தின் ஒருபகுதியின் மீது மோதி கீழே விழுந்தது.

விழுந்த ஹெலிகாப்டர் தீப்பிடித்து வெடித்து சிதறிய விபத்தில் அதில் இருந்த 18 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இன்னொரு ஹெலிகொப்டர் பத்திரமாக சென்று சேர்ந்ததாக தெரிய வந்துள்ளது