புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2018

மன்னார் புதைகுழி அகழ்வுக்கு காணாமல் போனோர் பணியகம் நிதியுதவி


மன்னார் நகர நுழைவாயில் சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பாரிய மனிதப் புதைகுழி அகழ்வுக்கு, காணாமல் போனோர் பணியகம் நிதி அளிக்கும் என்று பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

48 நாட்களுக்கு முன்னர் இந்தப் புதைகுழியைத் தோண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர், இதுவரை 62 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் புதைகுழி அகழ்வுப் பணியை முன்னெடுப்பதற்கு நிதி போதாமல் இருப்பதாகவும், இதற்கு உதவி அளிக்குமாறும் காணாமல் போனோர் பணியகத்திடம், சட்ட மருத்துவ அதிகாரி சமிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, மன்னார் புதைகுழி அகழ்வுப் பணிக்கு தாம் நிதி வழங்கியுள்ளதாகவும், எதிர்காலத்திலும் உதவத் தயாராக இருப்பதாகவும், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தடயவியல் நிபுணர்களின் அகழ்வு, போக்குவரத்து, தங்குமிடம், மற்றும் ஏனைய உதவிச் சேவைகளை உள்ளடக்கிய அடிப்படை செலவுகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

ad

ad