புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 ஆக., 2018

ஜெனிவாவில் இன்னொரு தீர்மானம் கொண்டு வர வேண்டும்! - சுமந்திரன்


ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்­து­வற்­கான பன்­னாட்டு அழுத்­தத்­தைக் கொடுப்­ப­தற்கு, பன்­னாட்டு மேற்­பார்வை நீடிக்­கப்­ப­ட­ வேண்­டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மற்­றொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்ப­டுவ­தன் ஊடா­கவே அத­னைச் செய்ய முடி­யும். அமெ­ரிக்கா இல்­லா­த­தால் மாற்­று­வழி ஊடா­கவே செய்­ய­ வேண்­டி­யுள்­ளது. என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர், எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை அரசு இணங்­கிக் கொண்ட விட­யங்­களைச் செயற்­ப­டுத்­து­வற்­கான பன்­னாட்டு அழுத்­தத்­தைக் கொடுப்­ப­தற்கு, பன்­னாட்டு மேற்­பார்வை நீடிக்­கப்­ப­ட­ வேண்­டும். அடுத்த ஆண்டு மார்ச் மாதம் மற்­றொரு தீர்­மா­னம் நிறை­வேற்­றப்ப­டுவ­தன் ஊடா­கவே அத­னைச் செய்ய முடி­யும். அமெ­ரிக்கா இல்­லா­த­தால் மாற்­று­வழி ஊடா­கவே செய்­ய­ வேண்­டி­யுள்­ளது. என்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ர், எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

மூத்த ஊட­க­வி­ய­லா­ளர் இரா.துரை­ரத்­தி­னம் எழு­திய செய்­தி­க­ளின் மறு­பக்­கம்- நூல் வெளி­யீட்டு விழா கொழும்பு தமிழ் சங்­கத்­தின் முதன்மை மண்­ட­பத்­தில் நேற்று மாலை நடை­பெற்­றது. இந்த நிகழ்­வில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் எம்.ஏ.சுமந்­தி­ரன் முதன்மை அதி­தி­யா­கக் கலந்­து ­கொண்டு உரை­யாற்­றும்­ போதே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

“2017ஆம் ஆண்டு இலங்­கைக்கு நாங்­கள் கால அவ­கா­சம் வழங்­கி­ய­தா­கப் பல­ரும் ஒப்­பாரி வைத்­தார்­கள். கால அவ­கா­சம் என்ற சொல்லே தவ­றா­னது. 2015ஆம் ஆண்டு இலங்­கை­யும் இணை அனு­ச­ரணை வழங்கி தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது. அதில் பல முக்­கிய விட­யங்­கள் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­னம் ஒரு நாட்­டைக் கட்­டுப்­ப­டுத்­தாது.

பன்­னாட்­டுச் சமூ­கத்­தில் தமது நாட்­டின் நற்­பெ­ய­ருக்கு களங்­கம் ஏற்­பட்­டு ­வி­டுமோ என்ற அச்­சத்­தில் ஒவ்­வொரு நாடு­க­ளும் தீர்­மா­னத்­தில் உள்­ள­வற்றை செய்ய முற்­ப­டு­வார்­கள். அப்­ப­டி­யான ஒரு பொறி­மு­றை­யையே நாங்­கள் இலங்கை விட­யத்­தி­லும் கையாண்­டோம்.2017ஆம் ஆண்டு மார்ச் மாதத்­து­டன் இலங்கை மீதான பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பு முடி­வுற்­றது. தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட விட­யங்­களை இலங்கை அரசு நிறை­வேற்­று­வ­தற்கு, அதன் மீது பன்­னாட்டு அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­ப­ட­வேண்­டும்.

அழுத்­தத்­தைப் பிர­யோ­கிப்­ப­தற்கு பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பு இலங்கை மீது இருக்­க­ வேண்­டும். 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் இலங்கை மீதான பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பு இரண்டு ஆண்­டு­க­ளுக்கு நீடிக்­கப்­பட்­டது.

2015ஆம் ஆண்டு இலங்­கை­யும் இணை­அ­னு­ச­ரணை வழங்கி நிறை­வேற்­றிய தீர்­மா­னத்­தில் சொல்­லப்­பட்ட விட­யங்­கள் உடனே செய்து முடிக்­கப்­பட முடி­யா­தவை. அவற்­றில் சில­வற்றை நிறை­வேற்­று­வ­தற்கு பத்து ஆண்­டு­கள் வரை­யி­லும் செல்­ல­லாம்.

அந்­தத் தீர்­மா­னத்­தில் உள்ள மிக முக்­கி­ய­மான விட­யங்­க­ளை­யா­வது இலங்­கையை நிறை­வேற்­றச் செய்­வ­தற்கு பன்­னாட்டு அழுத்­தம் அவ­சி­யம். பன்­னாட்டு அழுத்­தம் பிர­யோ­கிக்­கப்­ப­டு­வ­தற்கு இலங்கை மீது பன்­னாட்டு கண்­கா­ணிப்பு இருக்­க­வேண்­டும்.

2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்­தில் இலங்கை மீதான பன்­னாட்டு மேற்­பார்­வையை நீடிப்­ப­தற்கு மற்­றொரு தீர்­மா­னம் அவ­சி­யம். அந்­தத் தீர்­மா­னம் சில வேளை­க­ளில் நிறை­வேற்ற முடி­யா­மல் போக­லாம். ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யில் அமெ­ரிக்கா இல்லை.

அமெ­ரிக்­கா­வுக்கு வாக்­க­ளிக்­கும் தகுதி இல்லை. இலங்கை அர­சை­யும் இணங்­கச் செய்து கொண்­டு­ வ­ரு­ம­ள­வுக்கு சாத்­தி­யம் இருக்­குமோ தெரி­ய­வில்லை. ஐ.நா. செய­லர் மற்­றும் ஐ.நா. பொதுச் சபை­யின் ஊடாக அழுத்­தம் கொடுத்து பன்­னாட்டு மேற்­பார்­வையை நீடிப்­ப­தற்­கான தீர்­மா­னத்தை நிறை­வேற்­ற­வேண்­டி­யுள்­ளது.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை வேண்­டாம், பன்­னாட்டு மேற்­பார்வை வேண்­டாம் என்று சொல்­ப­வர்­கள், மாற்று வழி என்­ப­தைச் சொல்­வ­தில்லை. எல்­லாம் வேண்­டாம் வேண்­டாம் என்று சொன்­னால், என்ன செய்­யப் போ­கின்­றோம். இருப்­ப­தை­யும் விட்டு அடுத்து என்ன செய்­யப்­போ­கின்­றோம் என்று கேள்வி எழுப்­பி­னார்.

ad

ad