03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

யாழில் 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள சத்தியநாராணயன் ஆசிரியரின் காம வெறி


தெல்லிப்பளை யூனியன் கல்லூரியில் தரம் 7 இல் கல்வி கற்கும் 12 வயதுடைய சிறுமிகள் ஏழு பேரை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரொருவர் தெல்லிப்பளை பொலிஸரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பாடசாலையின் கணித பாட ஆசிரியரான செல்வரத்தினம் சத்தியநாராணயன் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

இவர் பல சந்தர்ப்பங்களில் குறித்த 7 மாணவிகளையும் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில் இது தொடர்பில் எவருக்கும் தெரிவிக்கக் கூடாது என குறித்த மாணவிகளை அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவிகளுக்கு கடந்த ஆறு மாத காலமாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பில் ஆசிரியர் கைது செய்யப்பட்டார். கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பெற்றோர்கள் செய்த முறைப்பாட்டையடுத்தே, இந்த கைது இடம்பெற்றது.

இது தொடர்பாக தெல்லிப்பழை காவல்துறையினர் ககூறும்போது- கொழும்பிலுள்ள தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பெற்றோர்கள் செய்த முறைப்பாடு எமக்கு கிடைக்கப் பெற்றது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தோம். இதுவரை பாதிக்கப்பட்ட மாணவிகள் எட்டு பேரிடமும் வாக்குமூலம் பதிவு செய்தோம். இப்பொழுது ஆசிரியரை கைது செய்துள்ளோம் என்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் இது தொடர்பில் கூறும்போது- கடந்த ஆறு மாத காலமாக எமது பிள்ளைகளுடன் சேட்டைவிட்டு வந்துள்ளார். மாணவிகளை அழைத்து அவர்களுடன் தவறாக நடக்க முற்பட்டுள்ளார். மேலதிக வகுப்பு என்று கூறி பிள்ளைகளை அழைத்து அவர்களுடன் தவறாக நடக்க முற்பட்டார். மாணவிகளை தனி அறைக்கு அழைத்துச் சென்று அவர்களை தவறான வழியில் நடக்க முற்பட்டுள்ளார். இந்த விடயங்களை வெளியில் யாரிடமும் கூற வேண்டாம் என்று எச்சரித்துள்ளார். இதனால் நீண்ட காலத்திற்கு பின்னரே பிள்ளைகள் எமக்கு தெரிவித்தனர். நாம் அதிபரிடம் தெரிவித்தோம். அவர்கள் விடயத்தை மூடி மறைக்க முற்பட்டார். அதனால் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையிடம் முறையிட்டோம் என கூறினர்.

இந்த விவகாரம் தொடர்பில் பாடசாலைஅதிபருக்கும், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோருக்கும் இடையில் கலந்துரையாடல் நேற்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது