தமிழீழக் கிண்ணம் வெற்றியாளர் யங் ஸ்டார் லீஸ் சுவிஸ் நேற்று சுவிஸ் விண்டத்தூரில் நடை பெற்ற 17 வது உலகு தழுவிய தமிழீழக்கிண்ணம் சுற்றுப்போட்டியில் சுவிஸ் , பிரான்ஸ் ,கனடா , நோர்வே , ஹாலந்து , டென்மார்க்,பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து 16 கழகங்கள் பங்கு பற்றி இருந்தன மின்னொளியில் நடைபெற்ற இறுதியாடடத்தில் சுவிஸ் றோயல் அணியை யங் ஸ்டார் கழகம் 4.0 என்ற ரீதியில் வீழ்த்தி (2018,2017,2012,2008)தொடர்ந்து இரண்டாவது தடவையாகவும் இந்த கிண்ணத்தை நான்காவது தடவையா கவும் வென்று சாதனை படைத்துள்ளது 70

ஞாயிறு, ஆகஸ்ட் 05, 2018

வெனிசுவெல அதிபர் பங்கேற்ற நிகழ்வில் குண்டு வெடிப்பு!


வெனிசுவெல தேசிய படைகளின் 81 வது ஆண்டு விழா அந்நாட்டின் தலைநகர் கராகசில் இன்று (05) நடைபெற்றது.

இதில், பங்கேற்ற ஜனாதிபதி மதுரோ, தொலைக்காட்சி மூலம் அந்நாட்டு மக்களிடம் நேரலையில் உரையாற்றினார். அப்போது எதிர்பாரத விதமாக அங்கு திடீரென குண்டுவெடித்தது. இதனால், நிகழ்ச்சியில் பங்கேற்ற படை வீரர்கள் பலரும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

வெனிசுவேலா தொலைத்தொடர்பு துறை அமைச்சர் ஜோர்ஜ் ரோட்ரிகியூஸ் ஊடங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், ஜனாதிபதி உரையாற்றிய போது ஆளில்லா சிறிய விமானங்கள்(ட்ரோன்) மூலம் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டது. ஆனால், அதிர்ஷ்டவசமாக ஜனாதிபதி மதுரோ உயிர் பிழைத்துள்ளதாகவும், படை வீரர்கள் 7 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்