03.04.2019 - புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் தேர்த்திருவிழா www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

செவ்வாய், ஆகஸ்ட் 14, 2018

நாடாளுமன்றில் தனித்து செயற்படுமா மஹிந்த அணி?- முக்கிய தீர்மானம் இன்று

நாடாளுமன்றில் சுயாதீனமாக செயற்படுவது குறித்து, ஒன்றிணைந்த எதிரணி இன்று (செவ்வாய்க்கிழமை) முக்கிய தீர்மானம் ஒன்றை எடுக்கவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஒன்றுகூடி இது குறித்து முக்கியமான தீர்மானத்தை எடுக்கவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்த சர்ச்சையால் நாடாளுமன்றில் பெரும் குழப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து அந்த பதவியைத் தங்களுக்கு தரவேண்டும் என, ஒன்றிணைந்த எதிரணி கோரிவந்த நிலையில், சபாநாயகர் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், நாடாளுமன்றத்தில் தாம் தனித்து சுயாதீனமாக செயற்படுவது குறித்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், மஹிந்த சார்ப்பு உறுப்பினர்கள் ஆராயவுள்ளனர்.

இதற்காக இன்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் விசேட சந்திப்பினையும் நடத்தவுள்ளனர்.

இதேவேளை, எதிரணியின் உரிமைகளை சபாநாயகர் புறக்கணித்தால், தாமும் நாடாளுமன்றில் சபாநாயகரை புறக்கணித்து செயற்படுவோம் என்று பிவிதுரு ஹெல உறுமயக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.