புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2018

ஜனா­தி­பதி மைத்திரி சந்­திப்­ப­தற்கு முன்னர் ஐ.நா.சபையுடன் நாம் பேசுவோம்

விசா­ரணையில் விட்­டுக்­கொ­டுப்­புக்கு இட­மில்லை; தமிழ்த் தலை­மைகள் திட்­ட­வட்டம்

இலங்கை இரா­ணு­வத்துக்கு எதி­ராக முன்­வைக்­கப்­பட்­டுள்ள போர்க் குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து இரா­ணு­வத்தை விடு­வித்து அவர்­களை பாது­காக்கும் வகையில் ஐக்­கிய நாடுகள் சபையில் ஜனா­தி­பதி முன்­வைக்­க­வுள்ள யோச­னையை நிரா­க­ரிக்­கின்றோம். ஜனா­தி­ப­தியின் இந்த நட­வ­டிக்கை தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபையின் ஏனைய அங்­கத்­துவ நாடு­க­ளு­டனும் இரா­ஜ­தந்­திர தரப்­புக்­க­ளு­டனும் பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்ளோம்

என்று தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு அறி­வித்­துள்­ளது. மேலும் யுத்­தக்­குற்றம் இழைத்­த­த­ரப்­பினர் மீது விசா­ரணை செய்­யப்­பட்டு அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­பட வேண்டும் என்ற ஐ.நா.தீர்­மா­னத்தில் எந்­த­வி­த­மான விட்டுக் கொடுப்­புக்­க­ளையும் கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ளாது. அத் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் மிகவும் காத்­தி­ர­மான பங்­க­ளிப்பு செலுத்­துவோம் எனவும் கூட்­ட­மைப்பு தெரி­வித்­துள்­ளது.

எதிர்­வரும் 24 ஆம் திகதி ஐக்­கிய நாடுகள் பொதுச் சபைக்­கூட்­டத்தில் தான் உரை நிகழ்த்­த­வுள்­ள­தா­கவும் அதன்­போது இரா­ணு­வத்­திற்கு எதி­ரான போர்க்­குற்­றச்­சாட்­டுக்­களில் இருந்து அவர்­களை விடு­விப்­பது தொடர்­பாக புதிய யோசனை ஒன்றை முன்­வைப்­ப­தற்கு தீர்­மா­னித்­துள்­ள­தாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­தி­ருந்தார். இந்­நி­லையில் ஜனா­தி­ப­தியின் இக் கருத்துத் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் கட்­சி­களின் தலை­வர்­க­ளிடம் வினா­வி­ய­போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தி­ருந்­தனர்.

மாவை

ஜனா­தி­ப­தியின் இக் கூற்றுத் தொடர்­பாக இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான மாவை சேனா­தி­ராசா தெரி­விக்­கையில்,

ஜனா­தி­பதி இரா­ணு­வத்­தி­னரை போர்க் குற்­றங்­களில் இருந்து பாது­காப்­ப­தனை நாம் ஒது­போதும் விரும்­பி­ய­தில்லை. அத்­துடன் இந் நட­வ­டிக்­கையை நாம் ஏற்­றுக்­கொள்­ளப்­போ­வதும் இல்லை. இந்­நி­லையில் ஜனா­தி­பதி முன்­வைக்கப் போவ­தாக கூறி­யி­ருக்கும் யோசனைத் திட்­டத்­தினை நாம் படித்த பின்பு அது தொடர்­பாக ஐக்­கிய நாடுகள் சபையின் ஏனைய அங்­கத்­துவ நாடு­க­ளிடம் எமது எதிர்ப்­பினை தெரி­விப்போம்.

அது­மட்­டு­மல்­லாது அங்­கத்­துவ நாடு­க­ளு­டனும் உறுப்பு நாடு­களின் இரா­ஜ­தந்­திர மட்­டத்­திலும் பேச்­சு­வார்த்­தை­களை நடாத்தி ஜனா­தி­பதி தனது யோச­னைத்­திட்­டத்தை முன்­வைப்­ப­தற்கு முன்பே அதற்கு எதி­ராக நாம் செயற்­ப­டவும் தயா­ரா­க­வுள்ளோம் என்றார்.

செல்வம் அடைக்­க­ல­நாதன்

கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான ரெலோ அமைப்பின் தலைவர் பாரா­ளு­மன்ற குழுக்­களின் பிர­தித்­த­லை­வ­ரான செல்வம் அடைக்­க­ல­நாதன் தெரி­விக்­கையில்.

ஜனா­தி­ப­தியின் இத் தீர்­மானம் தொடர்­பாக நாம் மிகக் கடு­மை­யாக எதிர்ப்­புக்­களைத் தெரி­விப்போம். போர்க் காலத்தில் எமது மக்­க­ளுக்கு ஏற்­பட்ட அநீ­தி­க­ளுக்கு நியா­ய­மான தீர்வு கிடைக்­க­வேண்டும் என்ற ஐ.நா. தீர்­மானம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட வேண்டும் என்­ப­தற்­கா­கவே நாம் போராடி வரு­கின்றோம். குற்றம் இழைத்த தரப்பு விசா­ரணை செய்­யப்­பட்டு நீதி மன்­றத்தின் ஊடாக அவர்­க­ளுக்கு தண்­டனை வழங்­கப்­ப­ட­வேண்டும்.

இந்­நி­லையில் இதனை வலி­யு­றுத்­து­கின்ற ஐக்­கிய நாடு­களின் தீர்­மா­னத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வதில் எந்­த­வி­த­மான விட்டுக் கொடுப்­புக்­க­ளையும் கூட்­ட­மைப்பு மேற்­கொள்­ளாது என்­ப­துடன் அதற்கு எதி­ரான மாற்றுச் சிந்­த­னைகள் கருத்­துக்கள் உரு­வா­கு­வா­த­னையும் நாம் அனு­ம­திக்­க­மாட்டோம். ஐ.நா தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்தி பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு நீதியைப் பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கு மிகவும் காத்­தி­ர­மாக பங்­க­ளிப்பு செலுத்­துவோம் என்றார்.

சித்­தார்த்தன் எம்.பி.

இது தொடர்­பாக கூட்­ட­மைப்பின் பங்­காளிக் கட்­சி­யான புளட் அமைப்பின் தலை­வரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான தர்­ம­லிங்கம் சிரத்­தார்த்தன் தெரி­விக்­கையில்,

தற்­போ­தைய ஜனா­தி­பதி மாத்­தி­ர­மல்ல இந்­நாட்டின் சிங்­களத் தலை­வர்கள் எவ­ராக இருப்­பினும் சிங்­கள மக்கள் எதனை விரும்­பு­கின்­றார்­களே அதனை முன்­னி­றுத்தி அவர்கள் செயற்­ப­டு­வார்கள். இதனைத் தவிர அவர்­க­ளிடம் இருந்து வேறு எவற்­றையும் நாம் எதிர்­பார்கக் முடி­யாது.

இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி தான் முன்­வைக்கப் போவ­தா­க­வுள்ள யோசனைத் திட்­டங்­களை முழு­மை­யாகப் பார்த்­த­ததன் பின்­னரே அது தொடர்பில் எமது நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­மு­டியும்.

இருந்­த­போ­திலும் இந் நல்­லாட்சி அர­சாங்­கத்­திலும் தமிழ் மக்­களின் அடிப்­படை நிலைப்­பா­டு­க­ளுக்கு எதி­ரா­கவே இவ் அர­சாங்­கமும் செயற்­பட்டு வரு­கின்­றது.

இவ்­வா­றான நிலையில் ஜனா­தி­பதி தற்­போது முன்­வைக்­க­வுள்­ள­தாக கூறி­யுள்ள யோசனைத் திட்­டத்­தினை அவர் முன்­வைத்து அதனை முழு­மை­யாக பார்த்­ததன் பிற்­பாடு அதற்கு எதி­ரான எமது நிலை­யப்­பாட்டை எமது மக்­க­ளுக்கும் சர்­வே­தச சமூ­கத்­திற்கு எடுத்­து­ரைத்து நாம் கோரு­கின்ற சர்­வ­தேச நீதி விசா­ர­ணையை முன்­னெ­டுப்­ப­தற்கு செயற்­ப­டுவோம் என்றார்.

சுரேஷ் பிரே­மச்­சந்­திரன்

இதே­வேளை ஜனா­தி­ப­தியின் இக் கூற்றுத் தொடர்­பாக தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பில் அங்­கத்­துவக் கட்­சி­யாக இருந்து தற்­போது கூட்­ட­மைப்பில் இருந்து வெளி­யே­றி­யுள்ள ஈ.பி.ஆர்.எல்.எவ். கட்­சியின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன் தெரி­விக்­கையில்,

ஐக்­கிய நாடுகள் மனித உரிமைப் பேர­வைக்கு இரா­ணு­வத்தை விசா­ரிப்­ப­தாக உறுதி வழங்­கிய அதே தரப்­பினர் தற்­போது இரா­ணு­வத்­தினை விசா­ரிக்க முடி­யாது எனக் கூறி வரு­கின்­றார்கள். சர்­வ­தேச விசா­ர­ணை­யையும், கலப்பு விசா­ர­ணை­யையும் நிரா­க­ரித்த அவர்கள் தற்­போது உலக விசா­ர­ணை­யையும் கைவிட்டு இரா­ணு­வத்­தி­னரைப் பாது­காக்கும் புதிய யோச­னை­யையும் முன்­வைக்­க­வுள்­ளார்கள்.

இவர்­க­ளு­டைய இச் செயற்­பா­டா­னது குற்றம் இழைத்த எந்த ஒரு இரா­ணு­வத்­தி­ன­ரையும் தண்­டிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­த­னையே உறு­தி­யாகத் தெரி­விக்­கின்­றது.

அவ்­வாறு விசா­ர­ணை­களை மேற்­கொண்டால் அது இரா­ணுவத் தரப்பில் இருந்தும் சிங்கள் மக்­க­ளி­ட­மி­ருந்தும் எதிர்ப்­பினை ஏற்­ப­டுத்தும் என்­ப­தனால் எத்­தனை ஆயிரம் மக்­களை கொன்­றி­ருந்­தாலும் அது தொடர்­பாக விசா­ரணை செய்­யப்­ப­டக்­கூ­டாது என்ற நிலைப்­பாட்­டி­லேயே அர­சாங்கம் உள்­ளது.

இந்­நி­லையில் இத்­த­கைய அர­சாங்­கத்­தினை தொடர்ந்தும் ஆத­ரிக்­கின்ற நிலை­யி­லேயே எமது தமிழ்த் தலை­மை­களும் ஈடு­பட்­டுள்­ளன.

அர­சாங்கம் எடுத்­துக்­கொண்­டுள்ள இந் நட­வ­டிக்­கை­யா­னது ஓர் மோச­மான நிலைப்­பாடு ஆகும். தமிழ் மக்­களும் இந் நாட்­டி­னு­டைய பிர­ஜைகள். எனவே அத் தமிழ் மக்­க­ளுக்கு இரா­ணுவத் தரப்­பி­னாலும் அர­சாங்­கத்­தி­னாலும் அநீதி இளைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை விசா­ரணை செய்­வ­தற்­கான ஓர் பொறி­மு­றையை வைத்­தி­ருக்­க­வேண்டும்.

அவ்­வா­றான பொறி­மு­றையை தாம் மேற்­கொள்­வ­தாக உறுதி அளித்த அர­சாங்கம் அதி­லி­ருந்தும் பின் வாங்­கி­யி­ருப்­ப­தா­னது தொடர்ந்தும் இவ் அர­சாங்­கத்தை நம்­ப­லாமா? என்ற கேள்­வியை அவர்­களே ஏற்­ப­டுத்­தி­யுள்­ளார்கள்.

பாதிக்­கப்­பட்ட தமிழ் மக்­க­ளுக்கு இவ் அர­சாங்­கத்தின் ஊடாக நியாயம் கிடைக்­காது என்­பது வெளிப்­ப­டை­யா­கவே தெரி­கின்­றது. பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு குறைந்த பட்ச நீதி­யைக்­கூட பெற்­றுக்­கொ­டுக்க முடி­யாத தலை­மை­களை தமிழ் மக்கள் அடுத்த தேர்­தலில் நிச்­ச­ய­மாக நிரா­க­ரிப்­பார்கள் அதற்­கான பாடத்தை தமிழ் மக்கள் நிச்­சயம் வழங்­கு­வார்கள் என்றார்.

கேள்வி : ஜனா­தி­ப­தியின் இந் நட­வ­டிக்கை தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டும் ?

பதில் : ஐ.நா. வில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வருவதில் தாமும் காரணம் என கூறிக்கொண்டிருக்கும் கூட்டமைப்பானது தற்போது அதிலிருந்த அரசாங்கம் பின் வாங்கும் நிலையில் இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பிரேரணைகளைக் கொண்டு வந்தும் அங்க அரசாங்கத்திடம் இது தொடர்பான கேள்விகளைக் கேட்கவேண்டியதுடன் சர்வதேசத்தின் கவனத்தை இதன்பால் கொடுண்டுவரத் தக்க வகையில் கூட்டமைப்பு செயற்படவேண்டும்.

ஆனால் இது வரையில் அவ்வாறு செய்வதாக இல்லை. மாறாக அரசாங்கத்தைப் பாதுகாப்பதிலேயே அவர்கள் இருக்கின்றார்கள். குறைந்தபட்சம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை வழங்காத அரசாங்கத்தை தொடர்ந்தும் தாங்கிப்பிடித்துக் கொண்டிருப்பது என்பது தமிழ்மக்களுக்கு கூட்டமைப்பு செய்யும் துரோகமாகவே அமையும் என்றார்.

ad

ad