புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2018

வறிய மக்களுக்கு வழங்கப்படும் நிதியை முறைகேடாக பயன்படுத்தும் கனேடிய பிரஜை – மக்கள் குற்றச்சாட்டு

வன்னி மக்களிற்கு வழங்கும் உதவிகளை மல்லாவியை சேர்ந்த கனேடிய பிரஜை ஒருவர் முறைகேடாக பயன்படுத்துவதாக பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்த குறித்த கனேடிய பிரஜை ஒருவர் இங்குள்ள ஏழை மாணவர்களிற்கு உதவுவதாக தெரிவித்து கனடாவில் பல்வேறு தரப்பினரிடம் நிதி சேகரித்து வருவதாகவும், அது உரிய முறையில் மக்களை சென்றடையவில்லை எனவும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரஜை முல்லைத்தீவு மல்லாவி பகுதியை சேர்ந்தவர் எனவும், அவர் நீண்ட காலமாக கனடாவின் மார்க்ஹம் ஒன்ராரியோவில் வசித்து வருவதாகவும், அங்குள்ள சிலரின் உதவியுடன் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு வறுமையில் உள்ள சிறார்களின் கல்விக்கு உதவுவதற்காக நிதி சேகரித்து வருவதாகவும், எனினும் குறித்த நிதி உரிய முறையில் மக்களை சென்றடையவில்லை எனவும் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி சாந்தபுரம் பகுதியில் சுமார் 125 பின்தங்கிய நிலையில் வாழும் ஏழை குடும்பங்களின் பிள்ளைகளிற்கு கல்வி கற்பிப்பதாக தெரிவித்து புகைப்படங்கள் சேகரிக்கப்பட்டதாகவும், அதன் பின்னர் தமது உறவினர் ஒருவரின் ஊடாக குறித்த நபரின் மனைவியின் பெயரில் கல்வி நிலையம் ஒன்றை உருவாக்கி அதற்கு குறிப்பிட்ட அளவு நிதியினையே செலவு செய்வதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

குறித்த கல்வி நிலையத்தில் 25 பிள்ளைகள் வரையே கல்வி கற்று வரும் நிலையில், ஏனைய 100 பிள்ளைகளிற்குமான நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

கடந்த காலங்களில் இலங்கையில் இவ்வாறான பாதிக்கப்பட்ட பிள்ளைகள், மாற்று திறனாளிகள் என பல்வேறு தரப்பினர்களின் புகைப்படங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டு உரிய முறையில் பாதிக்கப்பட்ட மக்களிற்கு பகிர்ந்தளிக்கப்படாமல் சேகரிக்கப்பட்ட நிதிக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் விடை காணாமல் உள்ள நிலையில், மீண்டும் இவ்வாறான மோசடிகள் இடம்பெறுகின்றமை தொடர்பில் புலம்பெயர் உறவுகள் அவதானத்துடன் இருக்குமாறு மக்கள் குறிப்பிடப்படுகின்றது.

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதியில் இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் நிலைமையை காட்டி பலர் தமது வைப்புக்களை அதிகரித்து கொள்கின்றமை தொடர்பில் செய்திகள் பரவலாக பேசப்பட்டு வந்தன.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவித்துள்ள அதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாதவாறும், வழங்கப்படும் நிதி தொடர்பில் சம்மந்தப்பட்ட நபருடன் உதவி வழங்கும் புலம்பெயர் உறவுகள் அவதானமாக செயற்படுமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

இதேவேளை, இவ்வாறான உதவிகள் வழங்கப்படும் சந்தர்ப்பத்தில் பொறுத்தமான கண்காணிப்பு இடம்பெறுகின்றதா என்பது தொடர்பிலும் புலம்பெயர் ஈழத்து உறவுகள் விழிப்பாக இருக்க வேண்டும் எனவும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

ad

ad