வெள்ளி, நவம்பர் 09, 2018

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான வர்த்தமானியில் 6 மணிக்கே கைச்சாத்திட்டார் ஜனாதிபதி

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டு, வர்த்தமானியை
அச்சிடுவதற்காக அனுப்பி வைத்துள்ளார்.
இந்த அதி விசேட வர்த்தமானியில், இன்று மாலை 6 மணிக்கே, ஜனாதிபதி கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சராகவுள்ள ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் கீழ், அரச அச்சகக் கூட்டுத்தாபனத்தைக் இன்று மாலை கொண்டுவந்தவுடனேயே, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான அதி விசேட வர்த்தமானியில் கைச்சாத்திட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.