புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 நவ., 2018

அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிப்போம் – ஐ.நா

சிறிலங்காவின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்து என்ன நடக்கிறது என்று கண்காணிக்கப்
போவதாக, ஐ.நா தெரிவித்துள்ளது.
நியூயோர்க்கில் சற்று முன்னர் செய்தியாளர்களைச் சந்தித்த ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் பர்ஹான் ஹக்கிடம், சிறிலங்கா நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது குறித்தும், நெருக்கடிகள் மீண்டும் மோசமடைவது குறித்தும் இதுதொடர்பாக ஐ.நாவின் நிலைப்பாடு தொடர்பாகவும் கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர், “சிறிலங்காவின் தற்போதைய நிலவரங்கள் தொடர்பாக எமக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
வழக்கமான அரசியலமைப்பு நடைமுறைகள் பின்பற்றப்படும் என்று நாங்கள் நிச்சயம் நம்புகிறோம். அதற்குப் பின்னர் என்ன நடக்கிறது என்று நாங்கள் கண்காணிப்போம்” என்று தெரிவித்துள்ளார்.

ad

ad