10 நவ., 2018

திருமாவளவனுக்கும் சி.வி.க்கும் இடையில் சந்திப்பு

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொள்.திருமாவளவனுக்கும் வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுள்ள தொல்.திருமாவளவன், பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளார். அந்தவகையில் யாழ். கனகரத்தினம் மகா வித்தியாலயத்தில் மரங்களை நாட்டி வைத்துள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட விக்னேஸ்வரன், திருமாவளவனை வரவேற்று தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஐங்கரநேசன், பாடசாலை அதிபர்- ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.தொள்.திருமாவளவனுக்கும் சி.வி.க்கும் இடையில் சந்திப்பு