www.pungudutivuswiss.com www.madathuveli.com www.youngstarlyss.com www.panavidaisivan.com www.sandrabalan.ml www.urativu.ml www.kananithamil.blogspot.com www.pungudutivumv.blogspot.com www.sivalaipiddi.blogspot.com 70

புதன், டிசம்பர் 05, 2018

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த்
தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு நேற்­றுக் கூடி ஆராய்ந்­த­போ­தும் அதில் எந்­த­வித முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.

நிரந்­த­ரத் தீர்வு கிடைக்­கும் வரை­யில் வடக்கு கிழக்கு மாகா­ணங்­க­ளைத் தற்­கா­லி­க­மாக இணைக்­க­வேண்­டும், அர­ச­மைப்­பின் 13ஆவது திருத்­தத்­தின் கீழ் மாகா­ணங்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டுள்ள காணி, பொலிஸ் அதி­கா­ரங்­கள் உட்­பட அனைத்து அதி­கா­ரங்­க­ளை­யும் உடன் வழங்­க­வேண்­டும் என்­பன உட்­பட 5 நிபந்­த­னை­களை நிறை­வேற்ற ரணில் இணங்­கி­னால் மட்­டுமே அவ­ருக்கு ஆத­ர­வ­ளிக்­கக் கூட்­ட­மைப்பு இணங்க வேண்­டும் என்று ரெலோ அமைப்­பின் செய­லா­ளர் ந.சிறி­காந்தா வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

அது பற்­றிப் பேசு­வ­தற்­கா­கக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு உடன் கூட்­டப்­ப­ட­வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

இதை­ய­டுத்து உயர் மட்­டக் குழு கூட்­டப்­பட்­ட­போ­தும் அதில் இது தொடர்­பில் எந்­த­வி­த­மான தீர்­மா­ன­மும் எடுக்­கப்­ப­ட­வில்லை, நாளை­ம­று­தி­னம் 7ஆம் திகதி மீண்­டும் கூடி இது பற்றி விவா­திப்­பது என்­றும் முடி­வெ­டுக்­கப்­பட்­ட­தா­கக் கூட்­டத்­தில் கலந்­து­கொண்­டி­ருந்த நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கும் முடிவை ஏற்­க­னவே தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுத்­தி­ருந்­தது. ரெலோ அமைப்­பின் செய­லர் ந.சிறி­காந்தா இத­னைக் கடு­மை­யாக எதிர்த்­தி­ருந்­தார். இப்­ப­டிப்­பட்­ட­தொரு முக்­கி­ய­மான கொள்கை முடிவை கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்­றக் குழு எடுக்­கக்­கூ­டாது என்­றும் அதனை கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழுவே எடுக்­க­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­யி­ருந்­தார்.

எதிர்க்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்று மாலை 5.30 மணி­யி­லி­ருந்து இரவு 8 மணி வரை­யில் கூட்­டம் நடை­பெற்­றது. இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளான இரா.சம்­பந்­தன், மாவை.சோ.சேனா­தி­ராசா, எம்.ஏ.சுமந்­தி­ரன் ஆகி­யோ­ரும், புளொட் சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் த.சித்­தார்த்­த­னும், ஆர்.ராக­வ­னும், ரெலோ சார்­பில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் செல்­வம் அடைக்­க­ல­நா­தன் மற்­றும் ந.சிறி­காந்தா, வினோ­நோ­த­ரா­த­லிங்­கம், எம்.கே.சிவா­ஜி­லிங்­கம், கோவிந்­தன் கரு­ணா­க­ரம் ஆகி­யோ­ரும் பங்­கேற்­ற­னர்.

கடந்த ஒக்­ரோ­பர் மாதம் 26ஆம் திக­திக்கு பின்­னர் நடை­பெற்ற சம்­ப­வங்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு எடுத்­துள்ள நிலைப்­பா­டு­கள் தொடர்­பில் கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­தன் தெரி­வித்­துள்­ளார்.

ரெலோ அமைப்பு, ஐக்­கிய தேசிய முன்­ன­ணிக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தாக இருந்­தால் நிபந்­த­னை­க­ளின் அடிப்­ப­டை­யி­லேயே அது அமை­ய­வேண்­டும் என்று வலி­யு­றுத்­தி­யது. அவற்­றுள் மிகச் சில­வற்றை முயற்­சிப்­ப­தற்கு எதிர்க் கட்­சித் தலை­வர் சம்­பந்­தர் இணங்­கி­னார் என்­றும் குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் தெரி­வித்­தார்.

தமது கட்­சிக்கு வழங்­கப்­பட வேண்­டிய தேசி­யப் பட்­டி­யல் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வியை வழங்­கு­மா­றும் ரெலோ அமைப்பு அழுத்­த­மா­கக் கோரி­யுள்­ளது. நாடா­ளு­மன்­றக் கலைப்­புத் தொடர்­பான நீதி­மன்­றத் தீர்ப்பு வந்த பின்­னர் அதைப் பார்க்­க­லாம் என்று கூறப்­பட்­டுள்­ளது.

எந்­த­வொரு முடி­வு­க­ளும் கூட்­டத்­தில் எடுக்­கப்­ப­ட­வில்லை. நாளை மறு­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை மீண்­டும் சந்­தித்­துப் பேசு­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான ஆட்­சிக்கு எத்­த­கைய நிபந்­த­னை­யின் கீழ் ஆத­ர­வ­ளிப்­பது என்­பது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உயர் மட்­டக் குழு நேற்­றுக் கூடி ஆராய்ந்­த­போ­தும் அதில் எந்­த­வித முடி­வும் எடுக்­கப்­ப­ட­வில்லை.