புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2018

தோண்டத் தோண்ட பல எலும்புக் கூடுகள்

மன்னார் மனிதப் புதைகுழியில் தோண்டத் தோண்ட மனித எலும்புக்கூடுகள் தொடர்ச்சியாக வெளி வந்து
கொண்டிருக்கும் நிலையில்,   தற்போது வரை குறித்த மனித புதை குழியில் 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
 மன்னார் மனித புதைகுழியின் அகழ்வு பணிகள் இன்று புதன் கிழமை (5) 111ஆவது நாளாக முன்னெடுக்கப்பட்டது.
மன்னார் நீதவான் ரி.சரவணராஜா   மேற்பார்வையில்,சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ தலைமையில் இன்று புதன் கிழமை  அகழ்வு பணிகள் இடம் பெற்றது.
இதன் போது தற்போது வரை 256 மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதோடு, அவற்றில் 250 மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டு மன்னார் நீதிமன்றத்தின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் பல மனித எலும்புக்கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டு அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.
இன்றைய தினம் புதன் கிழமை காலை அகழ்வு பணியை ஆரம்பித்து வைத்த அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி சமிந்த ராஜபக்ஸ அவசர கடமையின் நிமித்தம் அகழ்வு பணி இடம் பெறும் இடத்தில் இருந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்குச் சென்றதன் காரணத்தினால் இன்றைய தினம் ஊடகவியலாளர்கள் அவரிடம் கருத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை.

ad

ad