புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 டிச., 2018

தீர்மானங்கள் எட்டப்படாத நிலையில் முடிவடைந்தது கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்


கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று மாலை 5 மணி முதல் 8 மணி வரையில் கூட்டமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் இரா. சம்பந்தன், மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், புளொட் கட்சி சார்பில் த.சித்தார்த்தன், ஆர்.ராகவன், ரெலோ அமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என். ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

tna_party_meeting.jpg

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் தழிழர் நலன் பேணும் விடயங்கள் குறித்த உறுதிப்பாட்டை எழுத்து மூலம் பெறவேண்டும் என ரெலோ அமைப்பினர் கூட்டத்தில் வலியுறுத்த எழுத்து மூலமான உறதி மொழியை வலியுறுத்துவது பாதகமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அதனை தவிர்ப்பது நன்று என்ற விதத்தில் இரா. சம்பந்தன் கருத்து வெளியிட்டார்.

மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூட்டமைப்பு குழு கூட்டத்தில் பேசி தீர்மானம் எட்டப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad