சனி, மே 18, 2019

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால் பிரதான சுடர் ஏற்றினார்

சிங்களப் படைகளின் தாக்குதலில் தன் தாயார் இறந்துவிட்டார் என்பதையும் அறியாமல் அவரது மார்பில் பால் குடித்த சிறுமி ராகினி இன்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பிரதான சுடர் ஏற்றியமை அனைத்துத் தமிழர் மனங்களையும் ரணகளமாக்கியுள்ளது.

முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ராகினி எட்டு மாத பச்சிளம் குழந்தை. சிங்களப் படைகளின் தாக்குதலில் கை ஒன்றை இழந்த அச்சிறுமி வலியால் கதறிக்கொண்டிருந்தார்.

உலகத் தமிழினத்தை உலுக்கும் தமிழினத்தின் அவலம்...

சிங்களப் படைகளின் தாக்குதலில் அவரது தாயார் இறந்துவிட்டார். தந்தையார் படுகாயமடைந்து உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். தாயார் இறந்ததை அறியாத அச்சிறுமி தாயாரின் மார்பில் பால் குடித்துக்கொண்டிருந்தார்.

அந்தக் காட்சி அப்போது ஊடகங்கள் வாயிலாக சர்வதேசத்தின் கவனத்திற்குச் சென்றது. எனினும் யுத்தம் நிறுப்படாமல் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருந்தது.

அந்த யுத்தத்தின் சாட்சியாக தமிழ் மக்கள் மத்தியில் - தனது பேத்தியாருடன் வாழ்ந்து வரும் தற்போது 11 வயதான சிறுமி ராகினி – இன்று முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட அத்தனை உறவுகளுக்குமான பிரதான சுடiரை ஏற்றிவைத்தார்.

இறந்த தாயில் பால் குடித்த சிறுமி முள்ளிவாய்க்கால்

அந்த நினைவேந்தலில் கலந்துகொண்ட அத்தனை தமிழ் உள்ளங்களை மட்டுமன்றி புலம்பெயர் தேசத்தில் வாழும் உறவுகளையும் கண் கலங்க வைக்கும் நாளாக இன்றைய முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மாறியிருக்கின்றது