புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 மே, 2019

மஹிந்த கையெழுத்திடாமைக்கு கூட்டுஎதிரணி கூறும் காரணம்!

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுககு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ கையெழுத்திடாமல் இருப்பதற்கு எடுத்த தீர்மானம் ஒழுங்கு மரபின் அடிப்படையிலானதே என்று கூட்டுஎதிரணி நியாயம் கற்பித்திருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல்களில் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பலருடன் பதியுதீன் தொடர்புகளைக் கொண்டிருப்பதாகக் குற்றஞ்சாட்டி, அவருக்கெதிராகக் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 64 உறுப்பினர்கள் கைச்சாத்திட்டுள்ளனர்.

கூட்டுஎதிரணியின் சார்பில் இந்தப் பிரேரணையை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில காலை பாராளுமன்றத்திலுள்ள சபாநாயகர் அலுவலகத்தில் வைத்து அவரிடம் கையளித்திருந்தார்.

அமைச்சர்களுக்கோ,பாராளுமன்ற உறுப்பினர்களுக்கோ எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளில் ராஜபக்ஷவின் கையெழுத்தைப் பெறுவதில்லை என்று ஏற்கனவே கூட்டுஎதிரணி பாராளுமன்ற உறுப்பினர்களால் தீர்மானமொன்று எடுக்கப்பட்டிருந்தது.

அந்தத் தீர்மானத்தின் பிரகாரம் அமைச்சர் ஒருவருக்கோ அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கோ எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் ராஜபக்ஷ ஒருபோதும் கைச்சாத்திட்டிருக்கவில்லை.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை ஒன்றில் அல்லது ஜனாதிபதியைப் பதவி நீக்குவதற்கான அரசியல் குற்றப்பிரேரணை ஒன்றில் மாத்திரமே அவர் கைச்சாத்திடுவார் என்று கம்மன்பில கூறினார்.

கூட்டுஎதிரணியினால் அமைச்சர் ஒருவருக்கு அல்லது பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு எதிராகக் கொண்டவரப்பட்ட எந்தவொரு நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் மஹிந்த ராஜபக்ஷ கைச்சாத்திட்டிருக்கவில்லை என்று சுட்டிக்காட்டிய கம்மன்பில, கடந்த வருடம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராகக் கொண்டவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மாத்திரமே ராஜபக்ஷ கைச்சாத்திட்டடிருந்தார் என்று குறிப்பிட்டார்.

பிரதமருக்கு எதிராகக் கொண்டவரப்பட்ட அந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பல அமைச்சர்களுக்கு எதிராகவும், அரசாங்கத் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் நாம் முன்னர் சில நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கையளித்திருந்தோம். அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, ராஜித சேனாரத்ன ஆகியோருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளும் இதிலடங்கும். ஆனால் அவற்றில் எந்தவொன்றிலும் ராஜபக்ஷ கைச்சாத்திட்டிருக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

ad

ad