புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012




"சன், "டிவி' கலாநிதியின் முகத்திரையை, சில நாட்களில், கிழித்து எறிந்து, உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வருவேன்,'' என, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் செயல் அலுவலர் சக்சேனா தெரிவித்தார்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், "சன்' குழுமத்தில் பணியாற்றிய முன்னாள் ஊழியர், அய்யப்பன் புகார் கொடுத்த போது, உடன் வந்திருந்த, "சன் பிக்சர்ஸ்' முன்னாள் நிர்வாக இயக்குனர், சக்சேனா அளித்த பேட்டி: சன், "டிவி' நெர்வொர்க்

ஒவ்வொரு தமிழனும் பார்க்க வேண்டிய காணொளி 
------------------------------------------------------------------------

'' புதிதாக ஜெயலலிதா பதவி ஏற்ற பின்பு தான் ஈழத்து அகதிகள் நிம்மதி பேரு மூச்சு விடுகிறார்கள். சுமார் 190ஈழ த்தவர் போரியல் படிக்க ஒழுங்கு பன்னபடுள்ளது நிவாரண நிதியை ஆயிரமா க்கி தருகிறார்கள் கலைஞர் ஆட்சியில் 400 ரூப மட்டுமே அதாவது நாளைக்கு 13 ரூபாதான்.சத்யராஜ் சூர்யா கருணாஸ் விஜய் போன்ற நடிகர்கள் எமக்கு நேரடியாக உதவி செய்கிறார்கள்.பல கல்லூரிகள் இலவசமாக படிக்க இடம் தந்துள்ளார்கள்  முதல்வருக்கு நன்றி .இப்படி கூறிகிறார் ஈழநேரூ . சொல்வதெல்லாம் உண்மை சி தொலைக்காட்சியின் உண்மை விளக்கம் தரும் நிகழ்ச்சி .நன்றி சி டீவீ க்கும் நிர்மலா அக்காவுக்கும் 

100 பேரை கொன்று குவித்த  ரவுடி சுட்டுக்கொலை

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான்.

உக்ரைன் : கடுங்குளிரால் 37 பேர் பலி
உக்ரைன் நாட்டில், கடுங்குளிரால், 37 பேர் பலியாகியுள்ளனர். ஐரோப்பிய நாடான உக்ரைனில், தற்போது மைனஸ், 17 டிகிரி செல்சியஸ் அளவுக்கு குளிர் காணப்படுகிறது.

இலங்கையில் சிவப்பு மழை.இந்தியாவில் மஞ்சள் மழை.பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் ஓட்டம்
அண்மை நாட்களாக இலங்கையில் பல பாகங்களிலும் சிகப்பு மழை மற்றும் மீன் மழை பெய்துள்ளதோடு  மட்டுமன்றி வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் பூமியை நோக்கி விழுந்து வருகின்றன.

மட்டக்களப்பில் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்கள் பலவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டதுடன் அம்மக்களுக்கு அவசியமாக தேவைப்படும் பொருட்களை உடனுக்குடன் வழங்கியுள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர் மழையால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சித்தாண்டி, வந்தாறுமூலை, ஐயங்கேணி, தளவாய், ஏறாவூர்,கொம்மாதுறை,


நாட்டில் எந்தவொரு காரணத்திலேனும் டீசலின் விலை அதிகரிக்கப்படுமாயின், உத்தேச பேருந்து கட்டண மீளாய்வை பெற்றுக்கொள்ளாது சேவையிலிருந்து விலகப் போவதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இரண்டு நாட்களுக்கு முன்பு
இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து ஏமாற்றும் இவர்கள் பற்றிய தகவல் தந்து உதவுமாறு கோருகிறோம். Top News 
[Tuesday, 2012-12-18 17:12:29]
News Service
கடந்த பல வருடங்களாக சட்டவிரோத ஆட்கடத்தல் ஏஜென்டுகளாக செயற்பட்டு வெளிநாட்டுக்கு அனுப்புவதாக அழைத்துவந்து பலரை ஏமாற்றியுள்ள சூரியகுமார் மற்றும் சோபா கும்பல் பற்றிய மேலுமொரு வேதனைக்குரிய மோசடிச் சம்பவம் அம்பலமாகிறது. கடந்த 2010 மற்றும் 2011ம் ஆண்டுகளில் வன்னி மற்றும் யாழ்ப்பாணம் மன்னார் போன்ற பகுதிகளிலிருந்து இழைஞர் யுவதிகளை கென்யா நாட்டிற்கு அழைத்துவந்து பணத்தைப் பெற்றபின்னர் பலரை திட்டமிட்டு ஏமாற்றியுள்ள மோசடிக்காரர்களிடம் பாதிக்கபட்ட மேலுமொரு விதவைப் பெண்ணொருவர் கண்ணீர் சிந்தி தனது நிலையை எம்மிடம் தெரிவித்துள்ளார்.

“நீதானே என் பொன்வசந்தம்” - திரைவிமர்சனம்!


மின்னலே, வி.தா.வா போன்ற முந்தைய ஹிட்டுகளால் கவுதம் மேனனின் காதல் படங்கள் என்றாலே கள் குடித்த நரியாகி திரிவார்கள் இளசுகள். அவர்கள் அத்தனை பேரையும் ஊளையிட வைத்திருக்கிறது நீ.எ.பொ.வ திரைப்படம்.
எமது தாயகத்தில் இருந்த ஆக்கிரமிப்பு படைகள் முற்றாக வெளியேற வேண்டும் என்பதே தமிழ்மக்களின் விருப்பமாகும் என்று தெரிவித்து தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (ரெலோ) தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசினால் இதுவரை காலமும் மேற்கொள்ளப்பட்டு வந்த தமிழ் இனப் படுகொலையை முன்னின்று நடாத்திய இலங்கை இராணுவம் உட்பட முப்படைகள் தமிழ் மக்களால் ஆக்கிரமிப்பு படைகளாகவே அதாவது சிங்களப் படைகளாவே பார்க்கப்படுகின்றது. 


ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... என்ற மூன்று பெண்களை திருமணம் முடித்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தினார்....ரகசியமாக காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது... சென்னையில் பரபரப்பு................!!

சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக இருக்கிறாராம்.

சிவமணிக்கு பெண் பழக்கம் அதிகம் இருந்துள்ளது. காம இச்சை கொண்டு அலைந்த அவர் அடுத்தடுத்து 3 பெண்களை மணந்து, குழந்தைகளையும் கொடுத்து குடும்பமும் நடத்தி கைதாகியுள்ளார்.

சிவமணி முறைப்படி முதலில் திருமணம் செய்த பெண்ணின் பெயர் ஸ்ரீதேவி. இவருக்கு வயது 35. நுங்கம்பாக்கத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் நர்ஸாகப் பணியாற்றி வருகிறார். இந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளன.

ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்தி வந்த சிவமணி திடீரென 2 வருடங்களுக்கு முன்பு மாயமாகி விட்டார். இதனால் திடுக்கிட்டுத் தவித்துப் போன ஸ்ரீதேவி அவரைத் தேடாத இடம் இல்லை, போகாத இடமி்ல்லை. ஆனாலும் காணவில்லை சிவமணி.

இதையடுத்து அண்ணாநகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார் ஸ்ரீதேவி. அவர்களும் வழக்குப் பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையி்ல்தான் சிவமணியின் காதல் லீலைகள் குறித்துப் போலீஸாருக்குத் தெரிய வந்தது. அவருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதும் அம்பலமானது.

ஸ்ரீதேவியுடன் குடும்பம் நடத்திய நிலையிலேயே சரஸ்வதி என்ற 30 வயதுப் பெண்ணுடனும் குடும்பம் நடத்தி வந்துள்ளார் சிவமணி. இதன் மூலம் 2 குழந்தைகளும் பிறந்துள்ளன. சரஸ்வதியை விசாரித்தபோது சிவமணி தனது கணவர் என்று கூறியுள்ளார். ரேஷன் கார்டையும் தூக்கிக் காட்டியுள்ளார்.

சரஸ்வதி வீட்டுக்கு சிவமணி வந்தால் கோழியை அமுக்குவது போல பிடிக்க போலீஸார் திட்டமிட்டனர். ஆனால் சிவமணி வராமலேயே எஸ் ஆகி விட்டார். இருப்பினும் போலீஸார் விடாமல் தீவிரமாக வலை வீசியதில் சின்மயா நகரில் அவர் இருப்பதாக தகவல் கிடைத்தது.

சின்மயா நகர் வீட்டுக்குப் போய்ப் பார்த்தால் அது துணை நடிகை ஷர்மிளாவின் வீடு என்று தெரிந்தது. அவர் கணவரைப் பிரிந்து வாழ்ந்து வருபவர். அவருக்கு 18 வயதில் மகள் இருக்கிறார் - ஆனால் அப்பா சிவமணி அல்ல. ஷர்மிளாவை கல்யாணம் செய்யாமல் வாழ்ந்து வந்துள்ளார் சிவமணி.

ஷர்மிளா ராஜபாண்டி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். டிவி தொடர்களில் தலை காட்டியுள்ளார். தற்போது கூட படப்பிடிப்புக்காக திருச்சி போயிருந்தார். கூடவே சிவமணியும் போயிருந்தார். இருவரும் ஜோடியாக திருச்சியிலிருந்து திரும்பியபோது போலீஸார் காத்திருந்து மடக்கிப் பிடித்தனர்.

ஸ்ரீதேவி புகாரின் பேரில் சிவமணியை போலீஸார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். முன்னதாக அவரை கோர்ட்டுக்குக் கூட்டி வந்தபோது அங்கு நின்றிருந்த ஸ்ரீதேவியும், சரஸ்வதியும், சிவமணியை சரமாரியாக திட்டி சாபமிட்டனர். ஆனாலும் சளைக்காத சிவமணி, இவர்கள் இருவருடனும் சேர்ந்து வாழத் தயார் என்று கூறி அனைவரையும் அதிர வைத்தார்ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக ஸ்ரீதேவி, சரஸ்வதி, ஷர்மிளா... என்ற மூன்று பெண்களை திருமணம் முடித்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தினார்....ரகசியமாக காதல் லீலை புரிந்த ரயில்வே அதிகாரி கைது... சென்னையில் பரபரப்பு................!!

சென்னையைச் சேர்ந்த ரயில்வே அதிகாரி ஒருவர் அடுக்கடுக்காக மூன்று பெண்களை மணந்து மூன்று பேருடனும் ரகசியமாக குடும்பம் நடத்தி வந்தது அம்பலமாகி போலீஸார் அவரைக் கைது செய்துள்ளனர்.

சென்னை அரும்பாக்கத்தில்தான் இந்த கூத்து நடந்துள்ளது.அங்குள்ள எம்.எம்.டி.ஏ காலனி பகுதியில் வசித்து வருபவர் சிவமணி. 44 வயதான இவர் ரயில்வேயில் அதிகாரியாக

18 டிச., 2012


செக் மோசடி: கிங்ஃபிஷர் விஜய் மல்லையாவிற்கு பிடிவாரண்ட்


வட பகுதிக்கான ரயில் சேவைகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.


மின்வெட்டை எதிர்த்து அறப்போர்: சென்னையில் கருணாநிதி, குஷ்பு! காஞ்சியில் ஸ்டாலின் பங்கேற்பு!

சென்னை: மின்வெட்டைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று திமுக சார்பில் நடத்தப்பட்ட மாபெரும் அறப்போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் கடந்த 13ம் தேதி சென்னை அண்ணா அறிவாலயம்

ராமநாதபுரத்தில் நடந்த சாலை விபத்தில் கல்லூரி பேராசிரியர், அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகியோர் பலியானார்கள்.
 
ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தரபாண்டியன். கல்லூரி பேராசிரியர். இவரது மனைவி சவுந்தரவள்ளி. இவர் ராமநாதபுரம் நகராட்சி பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இவர்கள் இன்று மாலை தங்கள்
வரதட்சணை கொடுக்காததால் 20 வயது பெண்ணை 3 ஆண்டாக குடும்பமே கற்பழித்த கொடூரம்
மத்திய பிரதேச மாநிலம் சாகர் மாவட்டம் பராஸ்ரி டியாண்டோ கிராமத்தை சேர்ந்தவர் ராம்கிசான். விவசாயி. இவரது மகள் சுஷ்மிதா (வயது 20) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 15 வயதிலேயே திருமணம் நடந்தது. பக்கத்து ஊரைச்
கால்பந்தாட்ட வீரர் ரூனி சுவிஸ் வருகை
மாண்ட்டெனெக்ரோ அணியின் வீரர் ஒருவரைக் கடுமையாகத் தாக்கியதால் மூன்றாண்டு சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட இங்கிலாந்து வீரர் வேன் ரூனி சுவிட்சர்லாந்துக்கு அங்குள்ள கால்பந்தாட்ட வீரர்களுக்குப் பயிற்சியளித்தார்.
 ]
இலங்கை அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 137 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அவுஸ்திரேலியா, இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் ஹோபர்ட்டில் நடைபெற்று வருகிறது.
முதல் இன்னிங்சில் அவுஸ்திரேலியா 450 ஓட்டங்களும், இலங்கை 336 ஓட்டங்களும் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் அவுஸ்திரேலியா 278 ஓட்டங்கள் எடுத்தது.

கொழும்பு புறநகர் பகுதியில் கைதுசெய்யப்பட்ட பிச்சைக்காரர் ஒரு இலட்சாதிபதி: பொலிஸார் அதிர்ச்சி
கொழும்பின் புறநகர்ப்பகுதியான ராகம பிரதேசத்தில் பிச்சைக்காரர் ஒருவரைக் கைது செய்த பொலிஸார், அவர் ஒரு இலட்சாதிபதி என்ற விபரத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ad

ad