புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 டிச., 2012


100 பேரை கொன்று குவித்த  ரவுடி சுட்டுக்கொலை

உத்தர பிரதேச மாநிலம் காசியாபாத்தில் இன்று நடந்த மோதலில், பல்வேறு கொலை வழக்குகளில் சம்பந்தப்பட்ட பிரபல ரவுடி சுட்டுக்கொல்லப்பட்டான்.



கூலிப்படையாக செயல்பட்டு சுமார் 100 பேரை கொன்ற ஜோகிந்தர் என்ற ஜக்கு பகல்வன், இன்று காலை ஒருகாரில் சென்றான். டிலா மோர் என்ற இடத்தில் சென்றபோது மற்றொரு காரில் வந்த 3 பேர் வழிமறித்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். ஜோகிந்தரும் திருப்பி சுட்டார். பின்னர் தாக்குதல் நடத்திய நபர்கள் தப்பிச் சென்றுவிட்டனர்.

தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று காயமடைந்த ஜோகிந்தர் மற்றும் டிரைவர் சந்தீப் இருவரையும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், ஜோகிந்தர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.  டிரைவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கொலை வழக்குகள் தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி ஜோகிந்தர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தான். பின்னர் கடந்த மாதம் 16-ம்தேதி ஜாமீனில் வெளியே வந்து, விசாரணைக்கு ஆஜராகி வந்தான். இதனை நோட்டமிட்ட எதிரிகள் இன்று தனியாக சென்றபோது தீர்த்து கட்டியுள்ளனர்.

ad

ad