புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 டிச., 2012


மாணவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்பது கனவிலும் கூட நடக்காது! யாழ். படைத்தளபதி ஹத்துருசிங்க
பல்கலைக்கழக மாணவர்கள் விடுதலை செய்யும் வரை யாழ் பல்கலைக்கழக கல்விச் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படும் என மாணவர்கள் காத்திருப்பது கனவிலும் கூட நடக்காது என யாழ் மாவட்ட கட்டளை தளபதி ஹத்துருசிங்க தெரிவித்துள்ளார்.

பந்தல் சேதமாக்கப்பட்ட போதிலும்,அடக்குமுறைக்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் உண்ணாவிரதம் ஆரம்பம்
கைது செய்யப்பட்டுள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யுமாறு கோரியும் அப்பாவி பொதுமக்களை காரணமின்றி கைது செய்து, தடுத்து வைத்தலுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

ஐரோப்பாவிற்கு விஜயம் செய்ய உள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க இரண்டு வாரங்கள் அங்கு தங்கியிருப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் பாரியார் மைத்திரி விக்ரமசிங்கவும் இந்த விஜயத்தில் இணைந்து கொள்வார் எனக் குறிப்பிடப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அவுஸ்திரேலியாவில் ஆர்ப்பாட்டம்!
இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைக்கு இலங்கை அரசாங்கம் இணங்கும் வரையில் அந்த நாட்டு கிரிக்கெட் அணியுடன் விளையாடுவதை அவுஸ்திரேலிய அரசாங்கமும் கிரிக்கெட் சபையும் நிறுத்திக்கொள்ள வேண்டும்


கனடாபுங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பூவரசம்பொழுது  புகைப்படங்கள் கீழே அழுத்தவும் 
நாசா விண்வெளி மறுப்பு:அமெரிக்காவின் "நாசா' விண்வெளி ஆய்வு மையம் இதை மறுத்துள்ளது.
எரிமலை சீற்றம், சூரிய காந்த புயல், கோள்களின் மோதல், விண்கற்களின் தாக்குதல், சுனாமி உள்ளிட்ட பல காரணங்களால், உலகம் அழிவதற்கான வாய்ப்புகள் உள்ளன.ஆனால், மேற்கண்ட சம்பவங்கள் ஒரே நேரத்தில் நிகழ்ந்தால் தான் உலகம் அழியும்.


புனேவில் நடந்த முதல் "டுவென்டி-20 போட்டியில், இந்திய அணி இங்கிலாந்து அணியை 5 விக்‌கெட் வித்தியாசத்தில் வென்றது
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து அணி, 4 டெஸ்ட், 2 "டுவென்டி-20, 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-1 என இங்கிலந்து வென்றது. இரு அணிகள் பங்கேற்கும் முதல் "டுவென்டி-20 போட்டி புனேவில் இன்று நடக்கிற

 T3 வீதித் தொடருந்தின் இரண்டாவது பகுதி இன்று சனிக்கிழமை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Porte D'Ivry முதல்  Potre de la Chapelle வரை 14,5 கிலோமீற்றர் தூரம் பயணம் செய்யயும் இந்த T3 வீதித் தொடருந்து பிரபல அரசியல்வாதிகளின் பயணத்தோடு இன்றைய தனது முதற் பயணத்தைத் தொடங்கியது. 

இலங்கை இராணுவத்தின் சிறப்புப் படைகளுடன் இணைந்து இந்திய இராணுவத்தின் சிறப்புப் படைப்பிரிவினர், இரகசிய கூட்டுப் போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் விவகாரம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தியாவின் இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள நஹான் சிறப்புப்படை பயிற்சி நிலையத்திலேயே இந்தப் போர்ப்பயிற்சிகள் இடம்பெற்று வருவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. 
ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதிக்கு புத்தர் சிலையொன்றைக் அன்பளிப்பு செய்ததுடன், இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியா தனது முழுமையான ஆதரவை வழங்கும் என்றும் உறுதியளித்தார்.
இலங்கையின் பாதுகாப்புக்கு இந்தியாவினால் முழுமையான ஆதரவு வழங்கப்படும் என்று இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய இராணுவ அதிகாரிகளின் பிரதானி ஜெனரல் பிக்ரம் சிங், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு இன்று உறுதியளித்தார். ஐந்து நாள்

வெள்ளத்தில் மிதக்கிறது மட்டக்களப்பு ; உயிரிழப்பு 22ஆக உயர்வு

நாட்டில் கடந்த மூன்று நாள்களாக தொடர்ந்து பெய்துவரும் அடை மழையால் வெள்ளம், மண்சரிவு, மரம் முறிவு ஆகியவற்றில் சிக்கி நேற்று மாலை வரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். 20 இற்கு மேற்பட்டோர் காணாமல்போயுள்ளனர். 50 இற்கு மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ் போதனா வைத்தியசாலை வைத்தியர் வாள் வெட்டுக்கு இலக்கு
யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியர் ஒருவர் வாள் வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் எல்லாம் வதந்தி : நாசா விஞ்ஞானி

 

மக்கள் மத்தியில் பீதியை கிளப்பிக்கொண்டிருக்கும் உலக அழிவு மற்றும் 3 நாள் இருள் என்பவற்றை நாசா விஞ்ஞானி டேவிட் மொரிஸன் முற்றாக மறுத்துள்ளார். கடந்த சில வாரங்களாவே நாசாவை மேற்கோள்காட்டி உலக அழிவு மற்றும் 3 நாள் தொடர்ச்சியான இருள் என சில மத அமைப்புக்கள் தங்களின் சுய இலாபத்திற்காக பிரச்சாரம் செய்து வருகின்றது. மேலும் குறுந்தகவல், ஈமெயில்

20 டிச., 2012


கர்நாடக இசைப் பாடகி நித்யஸ்ரீயின் கணவர் மகாதேவன் தற்கொலை (படங்கள்)

thx nakeeran

England 157/6 (20/20 ov)
India 158/5 (17.5/20 ov)
India won by 5 wickets (with 13 balls remaining)

வடமராட்சி கிழக்கு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவர் கர்ப்பமடைந்துள்ள நிலையில் சந்தேகத்தின் பேரில் 42 வயதுடைய நபர் ஒருவர் பருத்தித்துறைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆறு மாதங்களுக்கு முன்னர் வீட்டில் யாரும் இல்லாத சமயம் பார்த்து குறித்த சிறுமி குறித்த சந்தேக நபரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பின்னர் சம்பவம் தொடர்பில் தமது பெற்றோருக்கு சிறுமி அறிவிக்கவில்லை.


தமிழகத்தில் மின்சாரம் தாக்கி இலங்கை தமிழர் ஒருவர் பரிதாபமாக பலி
மின்விளக்கை அணைப்பதற்காக முயன்ற இலங்கைத் தமிழர் ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் தமிழகத்தில் நேற்றிரவு நடைபெற்றுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ். பல்கலை. மாணவர்களை விடுதலை செய்யுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் வேண்டுகோள்!
பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் நால்வரையும்  விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென மனித உரிமை கண்காணிப்பகம்  இலங்கை அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது..
கணவர் மகாதேவன் தற்கொலை செய்தது குறித்து தகவல் அறிந்ததும் நித்யஸ்ரீயும் தற்கொலைக்கு முயன்றார். விஷம் குடித்த அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியானது. ஆனால் இதை அவரது குடும்பத்தினர் மறுத்துள்ளனர். 

ad

ad