புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 ஏப்., 2024

பாரதிபுரத்தில் தமிழ் மக்களை படுகொலை செய்த 5 பொலிசாருக்கு மரணதண்டனை

www.pungudutivuswiss.com


கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர்  8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

கந்தளாய் - பாரதிபுரம் கிராமத்தில் 28 வருடங்களுக்கு முன்னர் 8 தமிழ் மக்களைக் கொலை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட ஐந்து பொலிஸாருக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது

கடந்த வெள்ளிக்கிழமை அனுராதபுரம் மேல் நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோதே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

மேல் நீதிமன்ற நீதிபதி மனோஜ் தல்கொடபிட்டியவினால் இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் பாரதிபுரம் பொலிஸ் நிலையத்திற்கு இணைக்கப்பட்டவர்கள் மற்றும் கொலை செய்யும் நோக்கத்துடன் சட்டவிரோதமாக கூடியிருந்ததாக குற்றம்சாட்டப்பட்டனர்.

கொன்ஸ்டபிள் சந்திரத்ன பனாதர, கொன்ஸ்டபிள் நிமல் பிரேமசிறி கோனார, பொலிஸ் கண்காணிப்பாளர்; ஆர்.எம். ரணராஜ பண்டார, உப பொலிஸ் பரிசோதகர் வை.எல். சோமரத்ன, மற்றும் கொன்ஸ்டபிள் செனரத் பண்டார மெதவெல ஆகியோருக்கே இந்த தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றஞ்சாட்டப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் தமது பொலிஸ் நிலையம் தாக்கப்பட்ட பின்னர் கிராமத்தில் தேடுதல் நடத்தியதாக கூறியிருந்தனர்.

எனினும் குறித்த பொலிஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

1996 ஆம் ஆண்டு பெப்ரவரி 1 ஆம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தின் பின்னர் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் 13 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக முதலில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எவ்வாறாயினும், நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இரண்டு சந்தேக நபர்களை விடுதலைப் புலிகள் கொலை செய்த பின்னர், வழக்கு அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்தநிலையில் ஏனையோர் சாட்சியங்கள் இன்றி விடுவிக்கப்பட்ட நிலையில் 5 பேர் மீது 37 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன.

ad

ad