யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபரே நீரில் மூழ்கி காணாமல் போய் உள்ளதுடன் திருகோணமலையை சேர்ந்த இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார். இளைஞர் குழுவினர் நீராடிக் கொண்டிருக்கும் போது ஒரு இளைஞனை கடல் நீர் இழுத்துச் சென்றுள்ளதை தொடர்ந்து காப்பாற்ற முற்பட்ட மற்றொரு இளைஞன் நீரில் மூழ்கியுள்ளார். நாயாறு கடற் படையினரின் உதவியுடன் ஒரு இளைஞன் உயிருடன் மீட்கப்பட்டு முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மற்றைய இளைஞனை தேடும் நடவடிக்கை மாலை வரை முன்னெடுக்கப்பட்ட நிலையில் இளைஞன் மீட்கப்படவில்லை என கடற் படையினர் தெரிவித்துள்ளனர். மேலும் நீரில் மூழ்கி காணாமல் போன இளைஞனை தேடு நடவடிக்கையில் கடற்படையினர் மற்றும் பிரதேச இளைஞர்கள் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. |