புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

8 பிப்., 2013




ராஜபக்சே வருகை:
சென்னையில் ஆர்ப்பாட்டம்



கிளிநொச்சி, ஸ்கந்தபுரத்தில் இரு இந்திய பிரஜைகள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.அக்கராயன்குளம், ஸ்கந்தபுரம் பிரதேசங்களில் உள்ள வீடுகளுக்கு சென்று மாந்தீரிகம் மற்றும் ஜோதிடம் பார்த்து மக்களிடம் பணத்தை திரட்டியவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஒற்றுமையுடன் போராடியிருந்தால் தமிழீழம் கிடைத்திருக்கும்! மஹிந்தவுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கருணாநிதி
இலங்கை ஜனாதிபதி ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் கறுப்புடை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, "டெசோ' உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அடுத்து இன்று டெசோ குழுவினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஜனாதிபதி மகிந்த இந்தியா வருகைக்கு எதிர்ப்பு: ஓசூரில் ரயில் மறியலில் ஈடுபட்டோர் மீது பொலிஸார் தாக்குதல்
இந்திய அரசின் உறுதிமிக்கத் துணையோடு, தமிழீழ மக்களை பல்லாயிரக்கணக்கில் கொன்று குவித்து, இனப்படுகொலையை அரங்கேற்றிய ஜனாதிபதி ராசபக்‌சவின் இந்திய வருகையைக் கண்டித்து இன்று காலை ஓசூரில் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் ரயில்

ஜனாதிபதி மகிந்த இந்திய வருகைக்கு எதிராக பிரதமர் மன்மோகன் வீடு முற்றுகை: டெல்லியில் வைகோ கைது
ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்திய பயணத்தை கண்டித்து, மதிமுக சார்பில் டெல்லியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இந்தி மத்திய அரசே காரணம்: பாஜக தலைவர் ராஜ்நாத் சிங்
இலங்கையில் உள்ள தமிழர்கள் பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வருகின்றனர். மத்திய அரசின் தவறான செயல்பாட்டால் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படவில்லை என்று பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜபக்சே இந்தியா வருகை தமிழர்களை சீண்டிப்பார்க்கும் செயல்: வைகோ ஆவேசம்
-----------------------------------------------------
சென்னை, பிப்.5-

டெல்லியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபடும் ம.தி.மு.க. தொண்டர்களை வைகோ எழும்பூர் ரெயில் நிலையத்தில் வழியனுப்பி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-

லட்சக்கணக்கான ஈழத் தமிழர்களையும், அவர்களின் பிஞ்சு குழந்தைகள், தாய்மார்களையும் ஈவு இரக்கமின்றி கொடூரமாக இனப்படுகொலையை நிகழ்த்திய இலங்கை அதிபர் ராஜபக்சேவை இந்தியாவுக்குள் வர அனுமதிக்கக்கூடாது என்று பலமுறை வலியுறுத்தி கூறினோம். மத்திய பிரதேசத்துக்கு வந்தபோது நேரில் சென்று போராட்டம் நடத்தினோம்.

இப்போது திட்டமிட்டு உலக நாடுகளின் கண்களில் மண்ணை தூவுவதற்காக 7 கோடி தமிழர்கள் வாழும் இந்தியாவில் கொடியவன் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு இல்லை என்று காட்டுவதற்காக அழைத்து வருகிறார்கள். ஐ.நா. மன்றத்தில் மனித உரிமை மீறல் விசாரணை விரைவில் வர இருக்கிறது.

அப்போது ராஜபக்சே பற்றிய எண்ணத்தை தடுப்பதற்காக சோனியா இயக்கும் மத்திய அரசு அவரை மீண்டும் இந்தியாவுக்கு வரவழைத்து உள்ளது. 47 உறுப்பு நாடுகளின் தூதர்களுக்கும் இனப்படுகொலை ஆவணங்கள் மற்றும் குறுந்தகடு ஆதாரங்களுடன் கடிதம் எழுதி இருக்கிறோம்.

ஈழத்தமிழர்களை காக்க அன்று தமிழகம் தவறி விட்டது. முத்துக்குமார் உள்பட 17 இளைஞர்கள் தங்கள் இன்னுயிர்களை மாய்த்தார்கள். அவர்கள் ஏற்றி வைத்த தீ இன்னும் அணையவில்லை. இத்தனைக்குப் பிறகும் ராஜபக்சேவை இந்தியாவுக்கு வரவழைத்துள்ளது. அதுவும் தமிழகத்தின் தலைவாசலான திருப்பதிக்கு வரவழைக்கிறது. இது தமிழர்களை சீண்டி பார்க்கும் செயல். எனவேதான் அவரை இந்தியாவுக்கு வரவழைத்ததற்காக டெல்லியில் பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று அறிவித்தோம்.




இந்திய அரசை கண்டித்து தன்னலமற்ற தமிழ் அமைப்புகள் போராட்ட களத்தில் உள்ளன. ம.தி.மு.க. தொண்டர்கள் ஆயிரத்து 500 பேர் இன்றும் நாளையுமாக ரெயில்களில் டெல்லி புறப்பட்டு செல்கிறார்கள். அவர்கள் அனைவரும் டெல்லி ஜந்தர் மந்தரில் இருந்து புறப்பட்டு சென்று பிரதமர் இல்லத்தை முற்றுகையிடுவார்கள்.

ஐ.சி.சி தரவரிசை வெளியீடு: முதலிடத்தில் இலங்கை

சர்வதேச கிரிக்கெட் வாரியத்தின் டி20 அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி மூன்றாவது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.

பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இலங்கை விஜயம்
பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா தலைமையிலான உயர்மட்டக் குழு இம்மாதம் 10ம் திகதி இலங்கைக்கு விஜயத்தை மேற்கொள்கின்றனர் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.


சுவிட்சர்லாந்தில் இருக்கும் ஒருவரைத் திருமணம் செய்து இந்தியாவில் கணவனின் குடும்பத்தாருடன் வாழ்ந்து வந்த நிலையில் இளம் குடும்ப பெண் ஒருவர் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் புளியங்கூடலை சேர்ந்த சசீந்தினி என்ற யுவதி கடந்த 2005 ஆம் சுவிட்சர்லாந்தில் வசிக்கும் தனது ஊரை சேர்ந்த ஒருவரை திருமணம் செய்த நிலையில் இந்தியா திருச்சி நகரின் கணவனின் குடும்பத்தாருடன் வசித்து வந்துள்ளார்.





            "ஆட்சியில் யார் இருந்தால் என்ன? சட்டத்துக்கு  பயந்தவர்களா நாங்கள்?  வழக்கு நடந்து... என்றோ தண்டனை கிடைத்து..? அட, போங்கப்பா... நீங்க வேற காமெடி பண்ணிக்கிட்டு...'’ எனச் சொல்லாமல் சொல்வது போல, மதுரை மண்ணில் பொட்டு சுரேஷ் குமாரை வெட்டிச் சாய்த்து விட்டு, நத்தம் நீதிமன்றத்தில் சரணடைந்திருக்கிறார்கள் இளைஞர்கள்

 லாஸ்ட் புல்லட்!

அறிஞர் அண்ணாவின் 44-வது நினைவுநாளையொட்டி பிப்ரவரி 3-ந் தேதியன்று தி.மு.க. சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இத்தனை ஆண்டு களில் ஓராண்டுகூட தவறாமல் பேரணியில் கலந்துகொள்ளும் கலைஞர், இந்த முறையும் கலந்துகொண்டார்.




""ஹலோ தலைவரே... மதுரையில் அரசியல் பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, சென்னையிலும் அதே மாதி



        இந்தியாவிலுள்ள புத்தகயா மற்றும் திருப்பதிக்கு இரண்டாவது முறையாக  8-ந் தேதி  வரவிருக்கிறார் ராஜபக்சே. தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவு கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் ராஜபக்சே வின் வருகையை அனுமதிக்கும் இந்திய அரசை கடுமையாக கண்டிப்பதுடன் பல் வேறு ஆர்ப்பாட்டங்களையும் நடத்தி வருகின்றன.



          டை பல கடந்து தமிழகம் முழுவதும் 7-ந் தேதி ரிலீஸ் ஆகிறது கமலின் விஸ்வரூபம்.  உள்துறை செயலாளர் ராஜகோபால் நடத்திய  முத்தரப்பு பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட உடன் பாட்டின்படி விஸ்வரூபத்திற்கான தடை நீங்கி இருக்கிறது. 
புலம் பெயர்ந்து உலக நாடுகளில் வாழும் தமிழீழ உறவுகளே!கடந்த காலங்களையும்,இன்றய நிகழ்வுகளையும்,ஈழத்தின் நாளைய நிலை பற்றியும்,இப்போதே,சிந்திக்க வேண்டியவர்கள்,நாங்கள். 
புலம்பெயர் மக்களே!
கடந்த காலங்களில் தமிழீழ மீட்பிற்காக நீங்கள் ஆற்றிய பணிகள் எத்தகைய பலம் வாய்ந்தது. ஒரு பெரும் விடுதலை போராட்டம் புலம்பெயர்ந்து வாழும் உங்களைக் கொண்டு,உங்கள் உதவிகளோடு நகர்த்தப்பட்டது என்றால் அதற்கு மாற்றுக்கருத்து


ராஜபக்சேவின் வருகையையொட்டி 
திருப்பதியில் 144 தடை உத்தரவு
இலங்கை அதிபர் ராஜபக்சேவின் வருகையையொட்டி, திருப்பதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


ராஜபக்சே வருகைக்கு எதிர்ப்பு: ஆந்திர எல்லையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் 30 பேர் கைது
இலங்கை அதிபர் ராஜபச்சே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆந்திர எல்லை புத்தூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்


திமுகவின் அடுத்த  தலைவர் குறித்து பேசிய குஷ்பு மீது கடும் தாக்குதல்
வார இதழ் ஒன்றுக்கு நடிகை குஷ்பு அளித்துள்ள பேட்டியில் திமுகவின் அடுத்த தலைவர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

ad

ad