புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013

ஐக்கிய நாடுகள் மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில் ஐக்கிய அமெரிக்கா முன்வைத்த பிரேரணை பெரும்பான்மை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

பிரேரணைக்கு ஆதரவாக 25 வாக்குகளும் 13 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டன. 8 நாடுகள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை. 

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

இலங்கைக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு


இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமை கவுன்ஸிலில் அமெரிக்கா தாக்கல் செய்த பிரேரணைக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது.
 

25ஆதரவு வாக்குகள்  13 எதிர்ப்பு வாக்குகள் 8 நடுநிலை முதல் நிலை 
இந்தொனசியா சிறிலங்காவுக்கு ஆதரவாக பேசுகிறது 
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா முன்வைத்துள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என பாக்கிஸ்தான் தெரிவித்துள்ளது. 

இலங்கை தொடர்பான பிரேரணையை ஐக்கிய அமெரிக்கா சற்று முன்னர் ஐநா மனித உரிமை கவுன்ஸின் 22வது கூட்டத் தொடரில் முன்வைத்துள்ளது. 
ஸ்ரீலங்கா சார்பில் சமரசிங்க பேசி கொண்டிருக்கிறார் வழமை போல பழைய கதைகளை பேசி சமாளி கிறார் 

டக்ளஸ், அங்கஜன் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் – நிஷாந்தன்


இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக தமிழ் மக்கள் பார்வையில் இவர்கள் இருவரும் நிர்வாணமாக தான் பார்க்கப்படுவார்கள். எம் மக்களின்
பிரேசில் பிரதிநிதி பொதுவாக பேசுகிறார் 
மொன்ட்டேன்க்ரோ பிரதிநிதி பேசியபின்னர் தற்போது சுவிஸ் பிரதிநிதி பொதுவாக பேசியுள்ளார் .சியாரோ லியோனோ பிரதிநிதி கடுமையாக இலங்கை போர் பற்றி பேசுகிறார் 
ஐரோப்பிய யூனியன் தமிழ ருக்கு ஆதரவாக  பேசி கொண்டிருகிறது பலத்ஹா ஆதரவு தரும் வகையில் பேச்சு உள்ளது 
தற்போது பாகிஸ்தான் சிறிலங்காவுக்கு அதரவாக வாக்களித்துள்ளது தனது பேச்சின் பொது பாகிஸ்தான் பிரதிநிதி தெரிவித்தார் ,இப்போது இந்திய தரப்பு பேச புறப்பட்ட பொது ஒழி வங்கியில் பிரச்சினை ஏற்பட்டு திருத்தப்பட்டது இப்போது இந்திய தரப்பு பேசுகிறது நேரொளி பரப்பை காணலாம் 

ஜெனிவா ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர்! இன்று வாக்கெடுப்பு! நேரலை ஒளிபரப்பு
ஜெனிவா, ஐநா மனித உரிமைகள் பேரவையின் 22வது கூட்டத்தொடர் கடந்த மாதம் 25ம் திகதி தொடங்கி நாளை மார்ச் 22ம் திகதியுடன் முடிவடையவுள்ளது.
அதன் முக்கிய அங்கமாக இன்று இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்டுள்ள தீர்மானத்தின் விவாதம் தற்போது நடைபெற்று வருகின்றது.
இதற்குரிய வாக்கெடுப்பு ஒரு சில மணி நேரங்களில் நடைபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாக்கெடுப்பை நேரடியாக பார்க்க ... இங்கே அழுத்தவும்

அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்களைச் செய்தது இந்தியா
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா 2 முக்கிய திருத்தங்கள் செய்து, அதனை வலுவானதாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும். 

ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த மாணவிகள் வெயிலில் அமர்ந்திருந்தால் சருமம் கறுத்துவிடும் என்பது குறித்த கவலையற்றவர்களாக இருந்தார்கள். 

மாணவர்கள் போராட்டத்தில் வந்து முகம் காட்டலாம் என்று வந்த எல்லா அரசியல்கட்சிகளையும் தள்ளி நிற்க வைத்தார்கள். 

கடுமையான வெயிலில் மாணவர்கள் அமர்ந்து போராடுவதைப் பார்த்த  காவல்துறை அதிகாரி ஒருவர் மாணவர்கள் சிலரை அழைத்து, ``வெயில் மணலில் அமர வேண்டாம்.. பக்கத்தில் புல்தரையில் அமருங்கள்..” என்று கூறினார். அதை அருகே நின்று கேட்டுக்கொண்டிருந்ததன் மூலம் எனக்கு ஒன்று உறுதியானது.. `ஜெயா மாணவர்கள் போராட்டத்தை கருணாவைப்போல் சீர்குலைக்க விரும்பவில்லை..’ என்று. ( இதற்கு பின் ஜெயாவின் ஓட்டுப்பொறுக்கி அரசியல் தந்திரம் இருக்கிறது. மாணவர் போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் திமுகவுக்கு எதிராக மக்களின் மனநிலையை மாற்றி ஓட்டு அருவடை செய்வதே ஜெயாவின் நோக்கமாக இருக்க முடியும். மற்றபடி ஈழத்தாய் பட்டம் கொடுத்தவர்கள் போல் அவருக்கு தமிழீழம் அமைத்துக்கொடுத்து அவதாரம் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் துளிகூட இருக்க முடியாது..)

ஆனால் மாணவர்கள்  அந்த காவல்துறை அதிகாரியின் கோரிக்கையை ஏற்காமல்  தொடர்ந்து கொளுத்தும் வெயிலில் சுடுமணலிலேயே அமர்ந்து போரட்டத்தை நடத்தினார்கள்.

நேரம் ஆக ஆக பெண் பிள்ளைகள் குழுவாக வந்து கொண்டே இருந்தார்கள். எண்ணிக்கை கூடிக்கொண்டே இருந்தது. அதைப் பார்க்க ஆச்சரியமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.. கல்லூரிகளுக்கு விடுமுறை விட்டும் மாணவர்கள் இப்படி கொளுத்தும் வெயிலில் வந்து போராட வேண்டும் என்ற எந்த அவசியமும் அவர்களுக்கு இல்லை. 

ஆனாலும் அவர்களை அப்படி வரவைத்தது பாலசந்திரனின் பால்மணம் மாறாத அந்த ஒற்றைப்பார்வையைத் தவிர வேறு என்னவாக இருக்க முடியும். 

உங்களைப் பார்க்க சிலீர்ப்பாக இருக்கிறது மாணவர்களே.. 2009 காலகட்டத்தில் உங்களையெல்லாம் நாங்கள் தவற விட்டுவிட்டோம் என்றே தோன்றுகிறது. ஆனாலும் இப்போது உங்களை களத்தில் பார்க்கையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது.. வெல்வோம் நாம்.. :)
இன்று மாணவர்கள் போராட்டத்தைக் காண மெரீனாவுக்கு சென்றிருந்தேன். காந்தி சிலைக்குப் பின்னாடி மாணவ மாணவிகள் கொளுத்தும் வெயிலில் மணலில் அமர்ந்திருந்தார்கள். கொடுமையான அந்த வெயிலில் நிற்பதே எரிச்சலாக இருக்கும்.

ஆனால் அந்த மாணவர்கள் அத்தனைபேரும் வெயிலை பொருட்படுத்தாமல் பாலசந்திரன் புகைப்படத்தையும் இலங்கைக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளையும் தூக்கிப்பிடித்தபடி கோசம் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். அங்கிருந்த

சிங்கள மக்கள் தொகையை விட 7 மடங்கு பெரியது தமிழர் மக்கள் தொகை . சிங்கள நிலப் பரப்பளவை விட 3 மடங்கு பெரியது தமிழர் நிலப் பரப்பளவு. இருந்தும் சிங்களவர்களை தமிழர்கள் வெற்றி கொள்ள முடியவில்லை. உலகெங்கும் இப்போது தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் அவல நிலையில் தமிழர்கள் இருக்கிறோம்.

காரணம் ஒன்று தான் : சிங்களவர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது . தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை . தமிழர்களுக்கு இனி தேவை ஒரு இறையாண்மை உள்ள நாடு . அது தனித் தமிழீழமாக இருக்கலாம் அல்லது தனித் தமிழ்நாடாக இருக்கலாம் . ஆனால் நிச்சயம் தேவை ஒரு நாடு . அப்போது தான் தமிழினத்தை நாம் காப்பாற்ற இயலும் .
சிங்கள மக்கள் தொகையை விட 7 மடங்கு பெரியது தமிழர் மக்கள் தொகை . சிங்கள  நிலப் பரப்பளவை விட 3 மடங்கு பெரியது தமிழர் நிலப் பரப்பளவு. இருந்தும் சிங்களவர்களை தமிழர்கள் வெற்றி கொள்ள முடியவில்லை. உலகெங்கும் இப்போது தமிழர்கள் சிங்கள அரசுக்கு எதிராக போராடி வரும் அவல நிலையில் தமிழர்கள் இருக்கிறோம். 

காரணம் ஒன்று தான் : சிங்களவர்களுக்கு ஒரு நாடு இருக்கிறது . தமிழர்களுக்கு என்று ஒரு நாடு இல்லை . தமிழர்களுக்கு இனி தேவை ஒரு இறையாண்மை உள்ள நாடு . அது தனித் தமிழீழமாக இருக்கலாம் அல்லது தனித் தமிழ்நாடாக இருக்கலாம் . ஆனால் நிச்சயம் தேவை ஒரு நாடு . அப்போது தான் தமிழினத்தை நாம் காப்பாற்ற இயலும் .

மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை : கலைஞர் கருத்து

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ சோதனை நடத்தப்பட்டது குறித்து இன்று செய்தியாளர்களிடம் கலைஞர் பேசியபோது, செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு அவர் அளித்த பதில்களும் :

திமுக பொருளாளர்  மு.க.ஸ்டாலின் வீட்டில் சிபிஐ!

சென்னை தேனாம்பேட்டையில் மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை நடைபெற்றது. அதே போல், சென்னை திருமூர்த்தி நகரில் இருக்கும் ஸ்டாலினின் நெருங்கிய நண்பர் ராஜசங்கர் வீட்டிலும் சோதனை நடைபெற்று வருகிறது. 

திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின் ஹம்மர் Fu\ விலை உயர்ந்த காரை வாங்கியுள்ளார். அந்தக் காரை சப்ளை செய்த ஏஜென்சி 33 பேருக்கு சப்ளை செய்து உள்ளது. அந்த 33 நபர்கள் வீட்டிலும் சிபிஜ சோதனை நடத்தியுள்ளது. அந்த வகையில்  உதயநிதி ஸ்டாலின் வீட்டிலும் சோதனை நடந்தாக செய்திகள் வெளியாகியுள்ளன.


மு.க.ஸ்டாலின் வீட்டில் சோதனை : சிபிஐ விளக்கம்
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வீட்டில் ரெய்டு நடத்தப்பட்டதற்கு பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்ட நிலையில், சி.பி.ஐ., விளக்கமளித்துள்ளது. 
இது குறித்து சி.பி.ஐ., வெளியிட்ட அறிக்கையில், சோதனை நடத்தப்பட்டது வழக்கமான நடவடிக்கைகள் தான்.  யாரையும் தனிப்பட்ட முறையில் குறிவைத்து சோதனை நடத்தப்படவில்லை’’ என்று கூறியுள்ளது.

12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றம்

வரும் நிதியாண்டில், 12,845 குடிசைகள் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.வீடு தோறும் கழிவறைக் கட்டும் திட்டத்துக்கு :ரூ. 72.6 கோடி ஒதுக்கீடு. 261 பேரூராட்சிகளில் உள்ள சாலைகள் ரூ. செலவில் மேம்படுத்தப்படும். ஆயிரம் ஊரக குடியிருப்புகளுக்கு ரூ.1190 கோடி செலவில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும். ரூ.1937 செலவில் 12,845 குடிசைகள், குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடுகளாக கட்டித்தரப்படும். ஆதிதிராவிடர் துணைத் திட்டத்துக்கு ரூ.7042 கோடி ஒதுக்கீடு. ஆதி திராவிடர் வீட்டு மேம்பாட்டு நிறுவனத்துக்கு ரூ.13.26 கோடி ஒதுக்கீடு.

ad

ad