புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


டக்ளஸ், அங்கஜன் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் – நிஷாந்தன்


இது இவர்களுக்கு மகிந்த ராஜபக்ஷ மத்தியில் பெரும் வரவேற்பாக அமையும். ஆனால் உலக தமிழ் மக்கள் பார்வையில் இவர்கள் இருவரும் நிர்வாணமாக தான் பார்க்கப்படுவார்கள். எம் மக்களின்
உரிமைகளுக்காகவும், விடிவிற்காகவும் 40 வருடங்களுக்கு மேலாக பல லட்சம் உயிர்களை தியாகம் செய்து பலவழிகளிலும் போராட்டங்களையும், பேச்சுக்களையும் நடத்தி கடைசியில் இப்போதுதான் குறிப்பாக முள்ளிவாய்க்காலுக்கு பின்னர் தான் உலக நாடுகளின் பார்வை எம் மக்கள் மீது திருப்பியிருக்கின்றது. இவ்வாறான நிலையில் நாம் இங்கிருந்து அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேரணையை இன்னும் வலுவூட்டுவதற்காக துடிக்கின்றோம். ஆனால் எம்மை இந்த அரசு முடக்கி வைத்திருக்கின்றார்கள். ஆனாலும் இன்று இந்தியா உட்பட உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பல போராட்டங்களையும், தீக்குளிப்புக்களையும் நடாத்தி வரும் வேளையில் நமது பிரதேசமான குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த அரசுக்கு ஆதரவாக அமைச்சர் டக்ளஸ், அமைப்பாளர் அங்கஜன் போன்ற தமிழின துரோகிகள் தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கும் இவ்வேளையில் இதை பொறுத்து கொள்ள முடியாமல் இவ்வாறான செயற்பாடுகளில் சில விஷமிகளின் கதையை கேட்டு ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கிறார்கள்.அமைச்சர் டக்ளஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் ஆகிய இருவரும் எம் மக்கள் முன் நிர்வாணமாக அலைய வேண்டியவர்கள் என யாழ்.மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர் எஸ்.நிஷாந்தன் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் யாழ். நகரப் பகுதியில் ஜனாதிபதிக்கும், இலங்கை அரசுக்கும் ஆதரவு தெரிவித்தும், அமெரிக்கா ஜனாதிபதி ஒபாமாவின் உருவசிலைகளை எரித்தும், கண்டித்தும், ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானத்தை எதிர்த்தும் டக்ளஸ், அங்கஜன் போன்ற தமிழின துரோகிகளால் மக்களை ஏமாற்றி, கபடத்தனமான முறையில் ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்து இராணுவத்தினரின் உதவியுடன் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் 200 க்கு மேற்பட்ட இராணுவத்தினர் சிவில் உடையிலும், சாவகச்சேரி, தீவகம் போன்ற பகுதிகளில் வாழும் எம் மக்களை வீட்டுதிட்டம் பதிவதற்காக என்று கூறியும் படித்த இளைஞர் சமூகத்தினரை வேலைவாய்ப்பு விடயமாக கூட்டம் என்று கூறியும் நயவஞ்சயமாக அழைத்து ஆர்ப்பாட்டத்தை நடத்தியிருக்கின்றார்கள். இதன் மூலம் அமைப்பாளர் அங்கஜன் இன்னும் பல எரிபொருள் நிலையத்துக்கான அனுமதியை பெற்றுவிடுவார். அமைச்சர் டக்ளஸ் மாநகர சபையை பயன்படுத்தி இன்னும் எங்கொல்லாம் கடை இருக்கின்றதோ அவற்றை எல்லாம் தன்னுடைய தம்பியார் தயாநந்தாவை வைத்து மிரட்டி பெற்று எடுத்துக்கொள்வார். இடையில் விபரம் தெரியாமல் சென்ற எம் மக்கள் பசியோடு வீடு திரும்பும் நிலைமை தான் இன்று நடந்து கொண்டு இருக்கின்றது. எனவே எது எப்படி இருந்தாலும் இவர்களுடைய இந்த சிறிய ஆர்ப்பாட்டத்தின் மூலம் கிடைக்கப் போகும் நல்ல காரியங்களை நிறுத்தி விட முடியாது. என்பதனை திட்டவட்டமாக கூறிக்கொள்கின்றேன் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ad

ad