புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 மார்., 2013


அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்களைச் செய்தது இந்தியா
ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தில் இந்தியா 2 முக்கிய திருத்தங்கள் செய்து, அதனை வலுவானதாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கு எதிரான அமெரிக்க தீர்மானம் வலுவானதாக இல்லை என்று தமிழக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டிவருவதுடன், தீர்மானத்தை திருத்துமாறு கோரி போராட்டங்களையும் மேற்கொண்டு வருகின்றன. இதற்காக தி.மு.க.வும் மத்திய அமைச்சரவையில் இருந்து வெளியேறியது.
ஆனால் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறும் போது, இந்தியா 2 முக்கிய திருத்தங்கள் செய்து வலுவான தீர்மானம் நிறைவேற்றப்படும் என்றார். இதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு துரிதமாக இறங்கியது.
இதற்காக ஜெனீவாவில் உள்ள இந்திய பிரதிநிதி திலிப்சின்கா நேற்று முன் தினம் இரவு அவசரமாக டெல்லி வரவழைக்கப்பட்டார். அவரிடம் அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்கள் செய்வது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
முன்னதாக பிரதமர் மன்மோகன்சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர்மேனன், வெளியுறவு துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் ஜெனீவா பிரதிநிதி திலிப்சின்காவும் கலந்து கொண்டார்.
அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்கள் செய்து வலுவானதாக நிறைவேற்ற தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. திருத்தம் செய்யப்பட்ட தீர்மானத்துடன் இந்திய பிரதிநிதி திலிப்சின்கா நேற்று இரவே ஜெனீவா புறப்பட்டுச் சென்றார்.
இன்று அவர் அமெரிக்க தீர்மானத்தில் 2 முக்கிய திருத்தங்களை முன் மொழிந்தார். ஏற்கனவே தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டாலும் அதில் செய்யப்படும் திருத்தம் தங்கள் வாய் மொழியாக ஏற்றுக் கொள்ளப்படும். இதனால் தீர்மானம் இந்தியா ஆதரவுடன் வெற்றி பெறுவதுடன் வலுவானதாக இருக்கும்.

ad

ad