புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 டிச., 2013

ஐ. நா பிரதிநிதிகளை இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும்; ஐரோப்பிய ஒன்றியம்
ஐக்கிய நாடுகள் பிரதிநிதிகள் இலங்கைக்கு விஜயம் செய்ய அரசாங்கம் கூடுதல் சந்தர்ப்பம் அளிக்க வேண்டும் என   ஐரோப்பிய ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது மனித படுகொலையே!: நிரந்தர மக்கள் தீர்ப்பாயம்
2009ம் ஆண்டில் இலங்கையில் இடம்பெற்றது, மனித படுகொலையே என ரோம் நகரை தலைமையமாகக் கொண்ட நிரந்தர மக்கள் தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.
சிங்களவர்களை எங்கே குடியேற்றுவது?: வட மாகாண சபையில் எதிர்க்கட்சி உறுப்பினர் கேள்வி
வடக்கிலுள்ள தமிழ் மக்கள் கொழும்பில் தங்கியிருப்பது போல் சிங்கள மக்களும் யாழ்ப்பாணத்தில் குடியேற முடியாதா?. முடியாதாயின் சிங்கள மக்களை நாங்கள் எங்கே குடியேற்றுவது  என வட மாகாண சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர் செனவிரத்ன எ.டி.தர்மபால கேள்வி எழுப்பினார்.

எதிர்வரும் Dec 28 அன்று சுவிஸ் பெர்ன் நகரில் இடம்பெறும் கரோலின் இசைக்குழுவின் மாபெரும் நிகழ்ச்சி

நெல்சன் மண்டேலாவின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி
தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு நினைவு பிரார்த்தனை, ஜோகன்னஸ்பர்க் அருகில் உள்ள ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற உலக நாடுகளின் தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இந்தியா சார்பில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, பாஜக மூத்த தலைவர் சுஷ்மா சுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நெல்சன் மண்டேலாவுக்கு பாரத ரத்னா வழங்கியதில் இந்தியா பெருமைப்படுகிறது: பிரணாப் முகர்ஜி

மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று
டெல்லி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற 25 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்கு

70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா 31 இடங்களில் வெற்றி பெற்றது. ஆம் ஆத்மி கட்சிக்கு 28 இடங்களும், காங்கிரசுக்கு 8 இடங்களும் கிடைத்தன.
மண்டேலாவுக்கு ஒபாமா அஞ்சலி
மறைந்த தென் ஆப்பிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவிற்கு இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. ஜோகன்ஸ்பர்க்கில் மண்டேலாவிற்கு அஞ்சலி பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
ராஜஸ்தான் முதல்வராக வசுந்தரா ராஜே சிந்தியா 13ந்தேதி பதவி ஏற்பு
அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபைத் தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றது. மாநிலத்தில் உள்ள 200 சட்டசபைத் தொகுதிகளில் பகுஜன் சமாஜ் கட்சியின் வேட்பாளர் ஒருவர் இறந்ததை அடுத்து 199 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. 
இதில், பாரதீய ஜனதா 162 தொகுதிகளை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட பாரதீய ஜனதா கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் வசுந்தரா ராஜே சிந்தியா முதல்–மந்திரியாக
சத்தீஸ்கர் முதல் அமைச்சராக ராமன் சிங் 12ஆம் தேதி பதவியேற்பு

சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. அங்கு மீண்டும் முதல் அமைச்சராக ராமன்சிங் வரும் 12ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராயப்பூர், போலீஸ் மைதானத்தில் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விழாவில் அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.
வடமாகாண சபைக்கான செங்கோல் தயாரிப்பு! தலைவர் கந்தையா சிவஞானம்
வட மாகாண சபைக்கான செங்கோல் தயாரிக்கப்பட்டு வருவதாக சபையின் அவைத்தலைவர் கந்தையா சிவஞானம் தெரிவித்தார்.
மனித உரிமைகளைப் பேணுவதில் சமநிலை இன்மையே எமது இன்றைய நிலைக்கு காரணம்!- கிளிநொச்சியில் ஹான்ஸ் போவர்
மனித உரிமைகளைப் பேணுவதிலும் அதனை உத்தரவாதப்படுத்துவதிலும் உலகில் சமநிலை காணப்படாமையே எமது இன்றையநிலைக்கு காரணமாகும்  என கிளிநொச்சியில் நடைபெற்ற மனித உரிமைகள் தின நிகழ்வில் கலந்து சிறப்புரையாற்றிய அருட்தந்தை மரியாம்பிள்ளை
தாயகம் - தேசியம் - தன்னாட்சியுரிமை: நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை சிறப்புடன் நிறைவடைந்தது!
சுதந்திர தமிழீழ விடுதலைப் பயணத்தில் ஓய்ந்தது போரேயன்றி போராட்டமல்ல என்பதனை உலகிற்கு முரசறைந்து முகிழ்ந்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு சிறப்புடன் நிறைவடைந்தது.
இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பில்
ஆக்கங்களை படைக்க முனைவேன்! -
கவிஞர் வைரமுத்து
10 டிசெம்பர் 2013,

கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் அடுத்த ஆண்டில், இலங்கையில் நடந்த படுகொலைகள் தொடர்பான ஆக்கங்களை படைக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ஊடகமான விகடனில் கேட்கப்பட்ட கேள்விகள் சிலவற்றுக்கு அழகிய தமிழ்ச் சொற்களை கோர்த்து கவிதை நயத்தோடு பதில்களை அளித்த கவிஞர் வைரமுத்து அவர்களிடம் இறுதியாக ஒரு கேள்வி கேட்கப்பட்டது.

அதாவது,

அடுத்த ஆண்டு என்ன செய்வதாக உத்தேசம்?

இதற்குப் பதிலளித்த கவிஞர்,

நமது இசை, நாட்டிய, சிற்ப மரபுகள் எல்லாம் பெரும்பாலும் மத வழிப்பட்டவை. இல்லாத கதை மாந்தர்களே பெரும்பாலும் கலைகளுக்குக் கருப்பொருளாகி இருக்கிறார்கள்.

இலங்கையில் நடந்த இனப் படுகொலை ஏன் இந்தக் கலையாளர்களின் கண்களுக்குத் தெரியவில்லை? அடுத்த ஆண்டு இதற்குத்தான் நான் முனைவேன். அதற்காக என்னை முன்மொழியும் கலைஞர்களை நான் வழிமொழிவேன்; துணையிருப்பேன்! எனத் தெரிவித்திருக்கின்றார்.

10 டிச., 2013

குடிபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி பலி
விழுப்புரம் அருகே கருங்காலிபட்டு காலனியை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சிவக்குமார் (வயது 30). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் வினோத் (27) என்பவரும் நெருங்கிய
இலங்கைத் தமிழர்களுக்கு எதிராக, இந்திய அமைதிப் படையினர் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டனர்: இலங்கையின் பாதுகாப்பு இணையத்தளம்
கடந்த காலத்திலும் தற்போதும் இந்தியா, இலங்கை தமிழர்களின் மனித உரிமைகளை மீறி வருவதாக இலங்கையின் பாதுகாப்பு இணைத்தளத்தில் கட்டுரை ஒன்று பிரசுரமாகியுள்ளது.
யாழில் பாலியல் வல்லுறவு தொடர்பான முறைப்பாடுகள் அதிகரிப்பு: காவல் துறையினர் - பெண்பிள்ளைகள் குறித்து பெற்றோர் விழிப்பாக இருக்க வேண்டும்: யாழ் அரச அதிபர்
யாழ் மாவட்டத்தில் இடம்பெற்று வரும் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் அதிகளவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையம் 
ஜெனிவாவில் இராணுவத்தினரை காப்பாற்ற நான் தயார்!- சரத் பொன்சேகா
சுவிஸர்லாந்தின் ஜெனிவா நகரில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறும் மனித உரிமை ஆணைக்குழுவின் மாநாட்டில் இலங்கை சார்பில் குரல் கொடுக்க தான் தயாராக இருப்பதாக முன்னாள்
வட மாகாண சபையில் இன்று வரவு செலவுத் திட்டம்!- முதலமைச்சர் சமர்ப்பிக்கிறார்!
வட மாகாண சபையின் முதலாவது வரவு செலவுத் திட்டத்தை இன்று செவ்வாய்க்கிழமை காலை கைதடியில் நடைபெறவுள்ள மாகாணசபை அமர்வில், முதலமைச்சர் விக்னேஸ்வரன் சமர்ப்பிக்கவுள்ளார்.

மலக்குழிக்குள் மனிதனை இறக்காதே: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மறியல் போராட்டம்
மலக்குழிக்குள் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடையில் மனிதனை இறக்கக் கூடாது. பாதாள சாக்கடை மற்றும் மலக்குழியில் நிகழ்ந்த மரணங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். இரயில்வே துறையில் மனித கழிவை மனிதனே

ad

ad