புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2013

குடிபோதையில் தண்டவாளத்தில் தூங்கிய 2 வாலிபர்கள் ரயில் மோதி பலி
விழுப்புரம் அருகே கருங்காலிபட்டு காலனியை சேர்ந்தவர் காந்தி. இவரது மகன் சிவக்குமார் (வயது 30). லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரும் அதே பகுதியை சேர்ந்த பாஸ்கரன் மகன் வினோத் (27) என்பவரும் நெருங்கிய
நண்பர்கள். எங்கு சென்றாலும் இருவரும் ஒன்றாகவே சென்று வருவார்கள்.


இந்த நிலையில் நேற்று இரவு சிவக்குமாரும், வினோத்தும் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு நண்பருடன் அங்குள்ள மதுக்கடைக்கு சென்றனர். மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு கருங்காலிக்குப்பம்– சிறுவாக்கூர் இடையே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து மது குடித்துள்ளனர்.


மதுகுடித்த உடனேயே சிவக்குமார் மற்றும் வினோத்துடன் வந்த நண்பர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஆனால் சிவக்குமாரும், வினோத்தும் நெடுநேரமாக தண்டவாளத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்துள்ளனர். குடிபோதையில் இருவரும் தண்டவாளத்தின் அருகேயே படுத்து தூங்கி விட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4.30 மணிக்கு சென்னை–காட்பாடி பயணிகள் ரெயில் தூங்கிக் கொண்டிருந்த 2 பேர் மீதும் மோதியது. இதில் உடல்கள் சிதறி சிவக்குமாரும், வினோத்தும் பரிதாபமாக இறந்து போனார்கள்.

ad

ad