புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2023

ராஜபக்சவினரை மக்கள் ஆணை மூலம் வெளியேற்றுவதற்கு ஒன்றுபட வேண்டும்

www.pungudutivuswiss.com

மக்கள் போராட்டத்தின்  மூலம் வெளியேற்றப்பட்ட ராஜபக்சவினரை மக்கள் ஆணை மூலமாக வெளியேற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். 
என பாராளுமன்ற உறுப்பினரும் 43 ஆம் படையணியின் தலைவருமான பாட்டலி சம்பின்ன ரணவிக்க தெரிவித்தார்.

மக்கள் போராட்டத்தின் மூலம் வெளியேற்றப்பட்ட ராஜபக்சவினரை மக்கள் ஆணை மூலமாக வெளியேற்றுவதற்கு அனைவரும் ஒன்றுபட வேண்டும். என பாராளுமன்ற உறுப்பினரும் 43 ஆம் படையணியின் தலைவருமான பாட்டலி சம்பின்ன ரணவிக்க தெரிவித்தார்

13 ஐ அமுல்படுத்தினால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும்!

www.pungudutivuswiss.com


குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். 
ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்

மகிந்த, கோட்டா, சந்திரிகா, சரத்துக்கும் மைத்திரியின் நிலை வரலாம்!

www.pungudutivuswiss.com

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்‌ஷ மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினர்,உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க தீர்ப்பு வழி சட்டமாக அமையலாம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பு போர்க் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள கோத்தாபய ராஜபக்‌ஷ மகிந்த ராஜபக்‌ஷ மற்றும் சரத் பொன்சேகா உள்ளிட்ட இராணுவத்தினர்,உயர் அதிகாரிகளுக்கு தண்டனை வழங்க தீர்ப்பு வழி சட்டமாக அமையலாம் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயலாளரான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்

சந்திரிகாவையும், சரத்தையும் வம்புக்கிழுத்த மைத்திரி

www.pungudutivuswiss.com

 உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள். இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக் கொள்ளாத சரத் பொன்சேகாவிற்கு என்னை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் குறிப்பிட்டார்

உடலையும், கண்ணையும் பாதுகாத்துக் கொள்ள முடியாதவர்கள் என்னை சிறைப்படுத்துமாறு குறிப்பிடுகிறார்கள். இராணுவ தலைமையகத்தை பாதுகாத்துக் கொள்ளாத சரத் பொன்சேகாவிற்கு என்னை விமர்சிக்க தார்மீக உரிமை கிடையாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபையில் குறிப்பிட்டா

சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தீரே சம்பந்தரே!

www.pungudutivuswiss.com

விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய இயக்கமாக நிலைபெற்றிருந்த காலத்தில் தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது.
அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை சம்பந்தன் பொறுப்பேற்று சின்னாபின்னமாக்கியது வரலாற்றத் துரோகம் என அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் பலம் பொருந்திய இயக்கமாக நிலைபெற்றிருந்த காலத்தில் தமிழரின் அரசியல் இருப்பை உறுதிப்படுத்தவே அனைத்துத் தமிழ்க் கட்சிகளையும் இணைத்து தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. அவ்வாறு உருவாக்கப்பட்ட கூட்டமைப்பை சம்பந்தன் பொறுப்பேற்று சின்னாபின்னமாக்கியது வரலாற்றத் துரோகம் என அதிபர் சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்துள்ளார்

18 ஜன., 2023

வவுனியா உள்ளூராட்சி சபைகள்- பங்கு போட்டுக் கொண்ட குத்துவிளக்கு பங்காளிகள்!

www.pungudutivuswiss.com


உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலின் பின்னர் வவுனியா மாநகரசபையில் தமிழீழ விடுதலை இயக்கமான டெலோ மேயரை நியமித்து ஆட்சி அமைக்கும் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் வினோ நோகராதலிங்கம் தெரிவித்தார்

யாழ். மாவட்ட அரசாங்க அதிபராக சிவபாலசுந்தரன் நியமனம்

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபராக அம்பலவாணர் சிவபாலசுந்தரன் நியமனம் செய்வதற்கான அனுமதியை 16 ஆம் திகதி திங்கட்கிழமை அமைச்சரவை வழங்கியுள்ளது.

சம்பந்தனை தலைவராக ஏற்கவில்லை என அறிவிக்க முடியுமா?

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள்  பிரியவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இன்றும் சம்பந்தன் ஐயா தான் இருக்கிறார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் பிரியவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இன்றும் சம்பந்தன் ஐயா தான் இருக்கிறார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

மீண்டும் ஆர்னோல்ட்

www.pungudutivuswiss.com


யாழ் மாநகர சபையில் நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள முதல்வர் தெரிவில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக இமானுவேல் ஆனோல்டை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமை செயலகத்தில் கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்றைய தினம் இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வரை தெரிவு செய்வதற்கான தெரிவு நாளைய தினம் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இதன்போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக யாரை நிறுத்துவது என்பது தொடர்பாக நேற்று இடம்பெற்ற கூட்டம் இணக்கமின்றி முடிவுக்கு வந்தநிலையில் -  இன்று காலை 9 மணிக்கு மீண்டும் கூட்டத்தைக் கூட்டி முதல்வர் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்பட்டது.

யாழ் மாநகர முதல்வர் வேட்பாளரை தெரிவு செய்வதில் தமிழரசு கட்சிக்குள் வேறுபட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன சொலமன் சிறில் ,இம்மானுவேல் ஆனோலட் ஆகியோரின் பெயர்கள் முதல்வர் தெரிவுக்கு முன்வைக்கப்பட்ட நிலையில் இம்மானுவேல் ஆனோலட் முதல்வர் தெரிவுக்கு நிறுத்த தீர்மானிக்கப்பட்டது

உக்ரைனில் உலங்கு வானூர்தி விபத்து: உள்துறை அமைச்சர் உட்பட 16 பேர் பலி

www.pungudutivuswiss.com
உக்ரைனில் உள்துறை அமைச்சர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் உலங்கு வானூர்தி 
விபத்தில் கொல்லப்பட்டனர்.

17 ஜன., 2023

15 வர்த்தக நிலையங்களில் திருடிய பொருட்களை வைத்து கடை நடத்திய ஆங்கில ஆசிரியர் களுத்துறையில் கைது!

www.pungudutivuswiss.com
breaking

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பதினைந்து கடைகளை உடைத்து பல இலட்சம் ரூபா பெறுமதியான  பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டில் ஆங்கில ஆசிரியர் உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

யாழ். மாவட்டத்தில் கட்டுப்பணம் செலுத்தியது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி

www.pungudutivuswiss.com
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யாழ்.மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

16 ஜன., 2023

கேணல் கிட்டு உள்ளிட்ட 10 மாவீரர்களின் நினைவேந்தல்!

www.pungudutivuswiss.com


கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16) இடம்பெற்றுள்ளது.தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.

கிட்டு உட்பட அவரோடு சேர்ந்து இதே நாளில் வீரமரணம் அடைந்த மாவீரர்கள் 10 பேரினதும் 30 ஆம் ஆண்டு நினைவேந்தல் முல்லைத்தீவு வள்ளிபுனம் பகுதியில் (இன்று 16) இடம்பெற்றுள்ளது.தேராவில் மாவீரர் துயிலும் இல்ல பணிக்குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது. இந்த நிகழ்வில் நூற்றுக்கணக்கான மக்கள் கிட்டு உட்பட ஏனைய மாவீரர்களின் திருவுருவ படத்துக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்

வலிகாமம் வடக்கில் 108 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணக்கம்!

www.pungudutivuswiss.com
களை விடுவிக்க இணக்கம்!
[Monday 2023-01-16 17:00]


வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர்  ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்.

வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள மக்களின் காணிகள் சுமார் 108 ஏக்கர் நிலப்பரப்பு இம்மாத இறுதிக்குள் விடுவிக்கப்படும் என இராணுவத்தினர் ஜனாதிபதி முன்னிலையில் தெரிவித்தனர்

யாழில் தமிழரசும் கட்டுப்பணத்தை செலுத்தியது!

www.pungudutivuswiss.com


இலங்கைத் தமிழரசுக் கட்சி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற 
தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இன்றைய தினம் திங்கட்கிழமை செலுத்தியது.

ரணிலுக்கு எதிர்ப்பு - நல்லூரில் பேரணி மீது நீர்த்தாரை பிரயோகம்

www.pungudutivuswiss.com

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸாரால் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

15 ஜன., 2023

இலங்கை கால்பந்தாட்ட சம்மேளனத்தின் புதிய தலைவராக ஜே. ஸ்ரீரங்கா தெரிவு செய்யப்பட்டுள்ளார்

www.pungudutivuswiss.com


இலங்கைக் கால்பந்தாட்டச் சம்மேளனத்தின் நிர்வாகக் குழுவுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. தலைவர் பதவிக்கான தேர்தலில் ஜே.ஸ்ரீரங்கா 27 வாக்குகளையும் 

தொடரை முழுமையாக கைப்பற்றும் முனைப்பில் இந்தியா...இலங்கைக்கு எதிராக டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.. https://www.dailythanthi.com/Sports/Cricket/in-an-attempt-to-win-the-series-completely-india-won-the-toss-and-elected-to-bat-against-sri-lanka-879336

www.pungudutivuswiss.com
இலங்கைக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் 
பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. திருவனந்தபுரம், இலங்கை கிரிக்கெட்

நேபாள விமான விபத்தில் 40 பேர் பலி!

www.pungudutivuswiss.com
மத்திய நேபாளத்தில் உள்ள விமான நிலையம் அருகே 72 பேருடன் சென்ற 
விமானம் விபத்துக்குள்ளானதில் 40 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக
 அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

விரலை வெட்டி மோதிரம் கொள்ளை!

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில்  மோதிரத்தை கொள்ளையடிப்பதற்காக விரலை அறுத்த சம்பவம்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாழ்ப்பாணத்தில் மோதிரத்தை கொள்ளையடிப்பதற்காக விரலை அறுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ad

ad