புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 ஜன., 2023

13 ஐ அமுல்படுத்தினால் தேவையற்ற பிரச்சினைகள் உருவாகும்!

www.pungudutivuswiss.com


குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார்.
13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். 
ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அரசியல் நோக்கத்திற்காக 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துவதாக குறிப்பிடுகிறார். தெற்கு அரசியல்வாதிகள் இணக்கம் தெரிவித்ததாக வடக்கிற்கு பொய்யுரைக்கிறார். 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையில்லாத பிரச்சினை தோற்றம் பெறும். ஆகவே ஜனாதிபதியின் இந்த பாவசெயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல் தலைமைகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற புனர்வாழ்வு பணியகச் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

புனர்வாழ்வு பணியக சட்டத்தை கொண்டு அரசியல் பழிவாங்கல் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் தவிர்த்துக் கொள்ள வேண்டும். அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் வன்மையான முறையில் அடக்கப்படுவது இயல்பாக இடம்பெறுகிறது.

விடுதலை புலிகள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கும்,போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்குவதற்கும் இடையில் பாரிய வேறுப்பாடுகள் காணப்படுகின்றன. 12 ஆயிரம் விடுதலை புலிகள் போராளிகள் சுயமாகவே இராணுவத்தில் சரணடைந்தார்கள். புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கினார்கள்.ஆகவே போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களையும், விடுதலை புலிகள் போராளிகளையும் ஒரு கோணத்தில் பார்க்க முடியாது.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு வழங்கும் பணிகள் நீதிமன்ற நடவடிக்கை ஊடாக முன்னெடுக்கப்பட வேண்டும். அதுவே போதைப்பொருள் அடிமையானவர்களுக்கு பாதுகாப்பானதாக அமையும்.

நாட்டு மக்கள் ஏழ்மை நிலையில் உள்ள போது மக்களை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது.போதைப்பொருள் கடத்தல்,ஏ.டி.ம் நிதி மோசடி,தங்க நகை அறுத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்பாடுகளில் பொலிஸார் ஈடுபடுகிறார்கள்.

பாதாள குழுவினர் சுதந்திரமாக மனித படுகொலை சம்பவங்களில் ஈடுபடுகிறார்கள்.நாட்டின் தேசிய பாதுகாப்பு மோசமாக உள்ளதுடன் நாடு அழிவை நோக்கிச் செல்கிறது. நாட்டு மக்கள் பட்டினியால் வாழும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதை போல் அரசியல் நோக்கத்திற்காக அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையான நிறைவேற்ற முயற்சிக்கிறார்.

தெற்கு அரசியல்வாதிகள் 13 ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த இணக்கம் தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி வடக்கு மக்களிடம் பொய்யுரைக்கிறார்.

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் தேவையற்ற பிரச்சினை தோற்றம் பெறும்.ஆகவே இந்த பாவ செயலில் பங்குதாரராகுவதை தமிழ் அரசியல்வாதிகள் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

ad

ad