புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

18 ஜன., 2023

சம்பந்தனை தலைவராக ஏற்கவில்லை என அறிவிக்க முடியுமா?

www.pungudutivuswiss.com


தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள்  பிரியவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இன்றும் சம்பந்தன் ஐயா தான் இருக்கிறார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து நாங்கள் பிரியவில்லை எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் இன்றும் சம்பந்தன் ஐயா தான் இருக்கிறார் எனவும் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்

அவ்வாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரிந்து விட்டது என்று சொன்னால் சம்பந்தன் ஐயாவை தலைவராக ஏற்றுக் கொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் , சித்தார்த்தன் ஆகியோர் அறிவிக்கட்டும் எனவும் குறிப்பிட்டார்.

மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் “அவர்களுக்குள்ளே ஐந்து கட்சிகள் ஆறு கட்சிகள் என இணைந்தார்கள் அதிலும் முதலாவது நாளிலே குழப்பங்கள் வந்திருந்தது நாங்கள் அறியக்கூடியதாக இருந்தது என்னுடைய நிலைப்பாடு நாங்கள் எங்களுடைய பங்காளி கட்சிகளை ஒருபோதும் விமர்சிக்கப் போவதில்லை அவர்கள் விமர்சிக்கிறார்கள் என்றால் அது அவர்களுடைய விருப்பம்.

என்னுடைய நிலைப்பாடு நாங்கள் இலங்கை தமிழரசு கட்சியுடையதும் பங்காளி கட்சிகளுடைய தொழில்நுட்ப ரீதியாக ஆராய்ந்ததன் அடிப்படையிலே அதிகூடிய ஆசனங்களை நமது பங்காளி கட்சியின் ஊடாகவும் நாங்களும் இணைந்து எடுத்து வடக்கு கிழக்கில் இருக்கும் அனைத்து பிரதேச சபைகளும் நாங்கள் ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் அமையும்.

எங்களுடைய பங்காளி கட்சிகளுக்கு இந்த இடத்திலேயே இந்த தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என நான் வாழ்த்துகின்றேன்.

உள்ளுராட்சி தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்வதற்காக சகல ஆயத்தங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக் கட்சி சார்பாக நாங்கள் இறுதிக்கட்டத்தை வந்திருக்கின்றோம்.

எங்களுக்கு பல வட்டாரங்களில் புதிய சவால்கள் காத்துக் கொண்டிருக்கிறது ஒருவரை தான் நாங்கள் நிறுத்தலாம் ஆனால் 6, 7 என அதிகமான விண்ணப்பங்கள் காணக்கூடியதாக இருக்கின்றது.

இம்முறை பெண்களுக்கும் இளைஞர்களுக்கும் அனைத்து இடங்களிலுமே நாங்கள் சமனான பங்குகளை செய்வதற்கு முயற்சி எடுத்து இருக்கின்றோம் ” என தெரிவித்தார்.

ad

ad