புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012

முதல் டெஸ்ட் போட்டி: இங்கிலாந்து 340/5
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் நடை பெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 521 ரன் குவித்தது. புஜாரா இரட்டை சதமும் (206), ஷேவாக் சதமும் (117)
அடித்தனர். சுவான் 5 விக்கெட் கைப் பற்றினார். 

இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் சுருண்டு பாலோஆன் ஆனது. பிரையர் அதிகபட்சமாக 48 ரன் எடுத்தார். ஒஜா 5 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 

பாலோஆன் ஆகி 2-வது இன்னிங்சை தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 111 ரன் எடுத்து இருந்தது. கேப்டன் கூக் 74 ரன்னிலும், காம்டன் 34 ரன்னிலும் ஆட்டம் இழக்காமல் இருந்தனர். 

இன்று (ஞாயிற்றுக்கிழமை) 4-வது நாள் ஆட்டம் நடந்தது. இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க மேலும் 219 ரன் தேவை. கைவசம் 10 விக்கெட் என்ற நிலையில் இங்கிலாந்து அணி தொடர்ந்து விளையாடியது. தொடக்க ஜோடியை ஜாகீர்கான் பிரித்தார். காம்டன் 37 ரன்னில் அவரது பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார். அப்போது இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 123 ஆக இருந்தது. கேப்டன் கூக் 86 ரன்னில் இருந்தார். 

3-வது விக்கெட்டுக்கு கூக்குடன், டிராட் ஜோடி சேர்ந்து விளையாடினார். கூக் சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து அணி 3 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் எடுத்தது. 

உணவு இடைவேளைக்கு பிறகு இருவரும் விளையாடினார்கள். டிராட் 17 ரன் அடித்திருந்த போது ஓஜா பந்து வீச்சில் அவுட் ஆனார். அடுத்து வந்த பெல் 22 ரன்னில் வெளியேற, அதைத்தொடர்ந்து வந்த பட்டேல் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். 

அடுத்ததாக வந்த பிரையர், கேப்டன் கூக்குடன் ஜோடி சேர்ந்து விளையாடினார். இருவரும் விக்கெட்டை காப்பாற்றும் நோக்கத்துடன் ஆடினார்கள். பிரையர் அரை சதம் அடித்தார். அவரை தொடர்ந்து கூக் 150 ரன் தொட்டார். இதனால் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. 

4 -வது நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டை இழந்து 340 ரன்கள் சேர்த்தது. கேப்டன் கூக் 168 ரன்களுடனும், பிரையர் 84 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்திய அணியை விட 10 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தனர். இன்னும் 1 நாள் மட்டும் தான் உள்ளது. இந்த டெஸ்ட் போட்டி அனேகமாக டிராவில் முடிய வாய்ப்பு உள்ளது

ad

ad