புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012


மேற்குலக நாடுகள் கூறுவதைக் கேட்டு ஐ.நா. செயற்படுத்துகிறது :- இலங்கை ஆவேசம்
இலங்கை விவகாரங்களில் மேற்குலக நாடுகள் சொல்வதைக் கேட்டுத்தான் எப்போதும்  ஐ.நா செயற்பட்டு வருவதாக சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
வன்னியில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின்போது ஐ.நா. அர்தபுஷ்டியுடன் செயற்படவில்லை. அவ்வாறு செயற்பட்டிருப்பின் இன்று இரகசிய அறிக்கைகளும் முளைத்திருக்காது எந்தவிதமான விசாரணைகளும் எழுந்திருக்காது.
எனவே ஐ.நா. தற்போது தோல்வியடைந்த அமைப்பாக வெளிப்பட்டுள்ளது என்று ஜாதிக ஹெல உறுமய பொதுச் செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரனவக்க தெரிவித்துள்ளார்.
மேற்குலக நாடுகளின் தேவைகளை தமது கொள்கையாக்கிக் கொண்டு செயற்படுகின்றமையால் ஏற்பட்ட விளைவுதான் இன்றைய ஐ.நாவின் உள்ளக விசாரணைகளுக்கான அடிப்படைக் காரணம் ஆகும்.
இலங்கை விவகாரங்களில் ஐ.நா. மேற்குலக நாடுகள் சொல்வதைக் கேட்டு அதன்படியே செயற்படுகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரச படைகள் மேற்கொண்ட போரின் போது ஐ.நா நேர்மையாக செயற்படவில்லை என உள்ளக இரகசிய அறிக்கையில் குறிப்பிட்டுள்ளமை, ஐ.நாவின் இயலாமையையும் பக்கச்சார்பான கொள்கையையும் சுட்டிக்காட்டுகின்றது.
இருப்பினும், இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் முடிவுக்கு வந்து நாடு சுமுகமான நிலையில் இயங்கிக்கொண்டிருக்கையில், மீண்டும் நாட்டைக் குழப்பியடிக்கும் வகையில், எந்தவொரு செயற்பாடும் இடம்பெறக்கூடாது.
மேற்குலக நாடுகளின் தேவைகளுக்கேற்ப செயற்பட்டு, சிறிய நாடுகளை ஆக்கிரமிக்கும் நடவடிக்கைக்கு துணைபோகும் கொள்கைகளை ஐ.நா.கைவிட வேண்டும்.
உலகத்திலும் பாரிய மனித உரிமை மீறல்களை அமெரிக்கா மேற்கொள்கின்றது. ஆனால் ஐ.நா அவற்றைக் கண்டுகொள்ளாமல், மாறாக இலங்கை போன்ற சிறிய நாடுகளில் நடக்கும் பிரச்சினைகளை பாரிய விடயமாக வெளிப்படுத்தி ஐ.நா செயற்படுகின்றமை வேடிக்கையாக இருக்கின்றது என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

ad

ad