புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012

திர்க்கட்சித் தலைவர் மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டதால் சபையில் சர்ச்சை
எதிர்க்கட்சித் தலைவர் மீதான டிரான் அலஸ் எம்.பி.யின் குற்றச்சாட்டுக்கள் விமர்சனங்கள் அதனைத் தொடர்ந்ததான எதிர்க்கட்சித் தலைவரின் விளக்கம் மற்றும் சபைக்குத் தலைமை தாங்கிய
அஸ்வர் எம்.பி.யின் தலையீடுகள் ஆகியவற்றுக்கு மத்தியில் சபையில் கடும் சர்ச்சையும் வாய்த்தர்க்கமும் இன்று திங்கட்கிழமை பாராளுமன்றத்தில் இடம்பெற்றன.
 

சபைக்குத் தலைமை தாங்கிய அஸ்வர் எம்.பி.க்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் அக்கிராசனத்தை நோக்கி கடும் வார்த்தைகளும் பிரயோகிக்கப்பட்டன.

பாராளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு - செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் ஜனநாயக தேசியக் கூட்டணி எம்.பி. டிரான் அலஸ் உரையாற்றினார். அவரது உரையின்போது எதிர்க்கட்சித் தலைவரால் கடந்த வியாழக்கிழமை அமர்வில் கூறப்பட்ட கருத்து தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்ததுடன் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் விமர்சனங்களை முன்வைத்தார்.

அங்கு ரணில் விக்கிரமசிங்க கூறுகையில்,

இந்த சபையில் எனக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன. எதிர்க்கட்சியைப் பொறுத்தவரையில் அது மிகவும் சிறப்பாக செயற்பட்டு வருகின்றது. எதிர்க் கட்சியிலிருந்து ஓர் உறுப்பினர் பாராளுமன்றிலிருந்து வாகனத்தைப் பெற்றுக்கொண்டு சம்பளத்தையும் பெற்றுக்கொண்டு பாராளுமன்றத்துள் உரையாற்றாதிருந்ததே குறைபாடாக இருந்தது. அதுவும் இன்று நீங்கிவிட்டது.

எதிர்க்கட்சி எவ்வாறு செயற்படுகின்றது என்பதை இந்தப் பாராளுமன்றம் நன்கு அறிந்துள்ளது எனத் தனது உரையைத் தொடர்ந்தார். இதன்போது ரணில் விக்கிரமசிங்கவின் ஒலிவாங்கி முடக்கப்பட்டது. இதனால் எதிர்க்கட்சித் தலைவருக்கும் அஸ்வர் எம்.பி.க்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது. அத்துடன் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களும் தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.

ad

ad