புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

19 நவ., 2012

தி.மு.க. மட்டும் தான் பொதுபிரச்சினைக்கு ஐ.நா.வரை சென்றுள்ளது: டி.ஆர்.பாலு பெருமிதம்
மறைந்த புதுக்கோட்டை மாவட்ட தி.மு.க செயலாளர் பெரியண்ணனின் 16-வது ஆண்டு நினைவு நாள் தி.மு.க.பொதுக்கூட்டம் புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னாள் நகர் மன்ற துணைத்தலைவர்
நயினா முகமது தலைமை தாங்கினார். இளைஞரணி அமைப்பாளர் சண்முகம் அனைவரையும் வரவேற்றார். 

கூட்டத்தில் மாவட்ட செயலாளர் பெரியண்ணன் அரசு, முன்னாள் எம்.எல்.ஏ கவிதைபித்தன், அவைத் தலைவர் சந்திரசேகரன், நகர செயலாளர் அரு.வீரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

கூட்டத்தில் தி.மு.க. நாடாளுன்ற குழு தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டு பேசுகையில் டெசோ மாநாட்டு தீர்மான நகலை நானும், துணை செயலாளர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஐ.நா.சபையில் கொடுத்துள்ளோம். இத்துடன் இதுகுறித்த வேலை இன்னும் முடியவில்லை. தி.மு.க மட்டும் தான் பொது பிரச்சினை குறித்து ஐ.நா. சபை வரை சென்றுள்ளது. இலங்கையின் உள்நாட்டு போரால் சுமார் 95 ஆயிரம் பெண்கள் விதவைகளாகியுள்ளனர். 

மேலும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் இலங்கை தமிழர்கள் நாடு கடந்து வாழ்ந்து வருகின்றனர். இலங்கை தமிழர் பிரச்சினையில் தி.மு.க இனிமேலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. இலங்கை பிரச்சினை தொடர்பாக வருகின்ற பாராளுமன்ற கூட்டத்தொடரில் வருகிற 22-ந்தேதி தி.மு.க சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட உள்ளது. 

இந்த தீர்மானத்தை முதல் வாரத்தில் எடுக்கவில்லை என்றால் மத்திய அரசு பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும். இலங்கை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வுகாணும் வரை தி.மு.க ஓயாது இவ்வாறு அவர் பேசினார். முடிவில் இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தில் நன்றி கூறினார்.

ad

ad